Sunday 21 September 2014

சோழன் கரிகாலன் கட்டிய கல்லணை


சோழன் கரிகாலன் கட்டிய கல்லணை
முனைவர் பேராசிரியர்ந.க.மங்களமுருகேசன்
சங்க காலத்திய முடியுடை மூவேந்தர்களில் சோழ மன்னர்களில் தலை சிறந்தவர் கரிகாற்சோழன். கரிகாலனைப் பட்டினப்-பாலை, பொருநராற்றுப் படை முதலிய பத்துப் பாட்டு நூல்கள் புகழ்ந்து .உரைக்கின்றன.
கரிகாற் சோழனின் பெருமைக்கு இன்றும் சான்றாய் விளங்குவது கரிகாற்சோழன் கட்டிய கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் தமிழனின் பொறியியல் ஆற்றலுக்குப் புகழ்ப் பரணி பாடிக் கொண்டி-ருப்பது காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை.
பொங்கிச் சிரிக்கும் தஞ்சையாகச் சோழப் பெருநாடு, பொய்யாச் சிறப்பின் வளம் பெற்ற மண்ணாகச் சோழ நாடு சோறுடைத்து என்று பெருமை பெறக் காரணமான காவிரிப் பெண்ணுக்குக் கால்கட்டாகக் கல்லணையைக் கட்டிப் பெருமை பெற்றான் இந்தச் சோழ-வேந்தன் இந்தக் காவிரிப் பெண் எங்கு பிறந்து, எங்குத் தவழ்ந்து வருகிறாள் என்று கொஞ்சம் மேற்கே திரும்பிப் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி குன்றில் தலைக்காவிரி என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகி 384 கி.மீ., தூரம் பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூரை அடையும் காவிரி ஓர் இடத்தில் ஆடு தாண்டும் அளவுக்குத் தன்னை ஒடுக்கிக் கொள்கிறது. இந்த இடத்திற்குப் பெயரே மேக்க தாட்டு (ஆடு தாண்டி)
இந்த ஓட்டத்தில் தான் பெங்களூர் கோலார் பகுதியில் உற்பத்தியாகும் அர்க்காவதி என்ற துணையாறு காவிரியில் சேர்ந்து கொள்கிறது.
ஒகேனக்கல்லிலிருந்து பவானி வரை காவிரி தெற்குத் திசையில் ஓடுகிறது. உதகைக்குத் தென் மேற்கே நீலகிரி மலையில் கடல் மட்டத்துக்கு மேல் 8000 அடி உயரத்தில் பிறக்கும் பவானி ஆறு, பவானி ஊருக்குத் தெற்கே காவிரியில் கலக்கிறது. பவானியும், காவிரியும் கூடுமிடம் மேட்டூர் அணைக்கு 80 மைல் தெற்கே இருக்கிறது.
இதன்பின், காவிரி கிழக்குத் திசையில் நொய்யலும், அமராவதியும் காவிரியில் சேர்-கின்றன. கோவை மாவட்டத்தில் நொய்யலும், மூணாறு பகுதியிலிருந்து அமராவதியும் உரு-வாகின்றன. இப்பொழுது காவிரி நன்கு விரித்து அகன்ற காவிரியாகிறது.
இப்படி வெள்ளத்தை மட்டுமல்லாமல் நம் உள்ளத்தையும் அள்ளிக் கொண்டு ஆழ்ந்து அகன்று வரும் காவிரிக்கு அன்று அணை கட்டிய அற்புதத்தைச் செய்தவன் சோழ நாட்டுத் தமிழ்த் தலைவன் கரிகாலன்.
வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.
பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்-சிக்குக் கிழக்குக் கல்லணைக்கருகில் காவிரியின் அருகே வருகிறது.
கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்-திற்கும் இடையே ஒருவித இணைப்பு ஏற்-படுகிறது.
ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்துவிட்ட காவிரியும் இயற்கை விதியின்-படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான் திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால்-கத்றே.
திருவால்கத்தின் மேல்முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது. மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொமுங்கி என அழைக்கப்-படும் ரெகுலேட்டர் தான். வெள்ளம் வரும்-போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தைக் கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள்.
அப்படியானால் அணை என்பது அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கரிகாலன் கட்டிய புகழ் பெற்ற அணையாகும். காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது.
காவிரி உயர் மட்டம்; கொள்ளிடம் பள்ளம்; கரிகாலன் கல்லணை கட்டுவதற்குமுன், காவிரி தன் வடகரையை உடைத்துக் கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதார-ணமாக நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்-துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் சிந்தனை வியப்-பை ஏற்படுத்துகிறது.
காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான்.
அக்கற்கள் உள்ளனவும் காவிரி உள்ளளவும் நிலைத்திருக்கும்படி அணையைக் கட்டினான்.
கீழே காவிரியிலும் அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு, அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன்.
ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையைக் கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக்கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனு-பவம் கிடையாது.
கல்லணை கட்டுவதற்கு வேண்டியிருந்திருக்கக்-கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் நீரொமுங்கி மதகுகள் அமைத்-தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றி-லும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று.
கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொமுங்கி கட்டினார்கள்.
கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள்.
இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்-ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. கொள்ளிடத்-திலுள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு, கல்-லணை மணற் போக்கிகள் வழியாகத் தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்-பதும் இயலுகிறது.
பின்னர், 1934இல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்-வாய் தலை மதகுக்காக வெண்ணாற்றுத் தலை மதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொமுங்கி அமைத்தனர்.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலை-வாச-லாக அமைந்துள்ளன.
கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடு-கின்றன.
கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குட-முருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழ-ளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன; சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களை-யெல்லாம் திருவெறும்பூர்ப் பகுதியிலிருந்து கொண்டு வந்து தடுத்துக் கட்டினான் என்று கூறுகின்றனர்

- உண்மை இதழ் ( ஜனவரி 16-31 / 2010 )

இஸ்லாம் இனிய மார்க்கம் ?

ஈரானில் முகமதுவை ஃபேஸ்புக்கில் அவமதித்ததாக 30 வயது இளைஞருக்கு மரண தண்டனை

# எம்புட்டு அமைதியான மார்க்கம்

- வால் பையன்

சேது சமுத்திர திட்டம்

"இராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை"
-நிதின் கட்காரி ( பி.ஜே.பி)
டேய் .... ங்கொய்யால...அப்படி ஒரு பாலமே அங்கே இல்லைன்னு சொல்றோம்.....
மொதல்ல அந்த பாலத்துல ? ஒரு ரவுண்டு நடந்து காட்டுங்கடா அப்புறமா அதை இடிக்கலாமா வேனாமான்னு முடிவு பண்ணிக்கலாம்டா சொம்பைங்களா ??!!!!!
- Periyar Suresh

ஆசிரியர் கி வீரமணி