Sunday 19 October 2014

வாகனங்களுக்கு தமிழில் பதிவு எண் எழுத தமிழ் எழுத்துருக்கள்.

வாகனங்களுக்கு தமிழில் பதிவு எண் எழுத தமிழ் எழுத்துருக்கள். 

த.நா.37 இஐ 7148 

A-

B-

C-

D-

E-

F-

G-

H-

J-

K-

L-

M-

N-
நா
P-

Q-

R-

S-

T-

U-

V-

W-

X-

Y-

Z-
ள.

=*=

தமிழ் எண்கள் : 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9 0-O

புலன் - கவிதை

கையிலிருக்கும் வீணை கொண்டு
சரஸ்வதி ஒலி எழுப்பி
எவரேனும் கேட்டதுண்டா ?

மயில் மீதேறி முருகன்
எங்கேனும் பயணித்ததை
எவரேனும் கண்டதுண்டா ?

இலட்சுமியின் தாமரை
மணம் உமிழ்ந்து
அதை முகர்ந்தவர் உண்டா ?

சிவன் தலை மீதிருந்த
கங்கையின் ருசி அறிந்த
நாவுகள் உண்டா ?

பசியை பிணியை
உணர முடிகிறதே !

பகவானை உணர முடியலையே ...


- பாசு . ஓவியச் செல்வன்

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு - கவிதை

தென் கோடியிலிருந்து சூரியன்
வடக்கு நோக்கத் தொடங்கும் நாளை
முதல் நாளாகக் கொண்டு தானே
ஆண்டைக் கணக்கிட்டனர் தமிழர் ,
அந்நாள் தை முதல் நாள் அல்லவா !!

1921 ஆம் ஆண்டிலே,
தமிழாண்டு தீர்மானிப்பு கருத்தரங்கிலே
மறைமலை அடிகளார் தலைமையிலே
அய்நூறுக்கும் மேலான தமிழறிஞர்
பச்சையப்பன் கல்லூரியிலே கூடினரே,
 திருவள்ளுவராண்டின் அடிப்படையில்
தை முதல் நாளே ஆண்டின் தொடக்கம்
என முடிவு செய்தனரே ...

நீள்வட்டப்பாதையிலே
சூரியனை பூமி சுற்றி வருகையிலே
பூமியும் சூரியனும்
வெகு அருகே சந்திப்பது
ஜனவரி மாதத்தில் தானே ...

பிரபவ முதல் அட்சய வரை
ஆபாசப் பின்னணியுள்ள
ஆண்டுகள் அறுபதும்
ஆகுமா தமிழாண்டு ?

சிந்திப்பாய் தமிழா
அறிவார்ந்த உண்மைகளை,
நிந்திப்பாய் தமிழா

அறிவுக்குப் பொருந்தா பொய்களை ....

பாசு . ஓவியச் செல்வன்

சென்னை தமிழில் ஓர் காதல் கவிதை .....

சென்னை தமிழில் ஓர் காதல் கவிதை .....

நீ
ஷோக்கா கீற,
நா மெய்யாலுமே
உம்மேல
லவ் சீக்கா கீறேன்,

ஒரு தபா
லுக் வுடு,
ஒரு தபா
கண்டுக்கினு,

உன்ன
இஸ்துகிணு போய்
கண்ணாலம்
கட்டிகிறேன்,

ஊ நைனா
காண்டு புட்சவன்,
மெர்சலாவாத
நா கீறேன்.

கைத ...
ஏங் காதல் கைத நீ
பேஜார் பண்ணாம
ஓகே சொல்டு ....

- பாசு . ஓவியச் செல்வன்



பெண் - கவிதை

” டொக் .. டொக் ... “


” புருஷன் வீடு தான்
இனி உனக்கு எல்லாமே 
பல்லிழந்த வாயிலிருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
கிழவியின் வார்த்தைகள்.


” எல்லாரையும்
அனுசரிச்சு நடந்துக்கணும் 
உடைந்த குரலை
சரி செய்து சொன்னார் அப்பா.



 ” சரி சரி நேரமாச்சி .. 
வேகப்படுத்தினான்
அண்ணன்.



குளமான கண்கள்
நெஞ்சத்தில் பதற்றம்
மகளை கட்டியணைத்த
அம்மாவுக்கு
அழுகையே வார்த்தையானது .



ஆழ அகலமாய்
வேர் பரப்பிய மரமொன்றை
கோடாரி கொண்டு
அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்
பக்கத்து வீட்டில் .

டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
  

-  பாசு . ஓவியச் செல்வன்

பரிகாரம் எனும் பெயரில் கொள்ளை ....

பரிகாரம் எனும் பெயரில் கொள்ளை ....

பூமிகாரகனான செவ்வாயும், வீட்டின் அழகான தோற்றத்திற்குக் காரணமாக விளங்கும் சுக்ரனும், எந்த விதத்திலாவது பாதிக்கப்பட்டிருந்தால் ஒருவருக்கு அமையும் வாடகை வீடு கூட பிரச்சினைக்குரியதாக மாறி, மனதிற்கு சங்கடங்களை உண்டாக்கும். 

இந்த நிலை மாறவும், மனதில் நிம்மதியும், அமைதியும் குடி கொள்ளவும் ஏதாவது ஒரு பழைய திருக்கோவிலின் கோபுரங்களுக்கு வர்ணம் பூசியோ, கோவிலின் உட்புற, வெளிப்புற சுவர்களுக்கு வெள்ளையும், காவி வர்ணமும் பூசி பராமரிப்பு செய்தாலோ மிகவும் நல்ல பலன்களை அனுபவ ரீதியாகக் கண்டு உணரலாம். 

- 
www.maalaimalar.com

http://www.maalaimalar.com/2014/01/03114157/problem-clear-pariharam.html


#  
ஏண்டா ... அவனே சொந்த வீடு கட்ட வசதி இல்லாமத் தான் வாடகை வீட்ல இருக்கான். அவன் காசுல கோயிலுக்கு ஓசியில பெயிண்ட் அடிக்கப் பாக்குறீங்களே ... நீங்கள்லாம் நல்லா வருவீங்கடா ...
ஆல் த பெஸ்ட் ....

 -  பாசு ஓவியச்செல்வன்

கடவுளுக்கு ஓர் மனிதனின் சவால்

கடவுள் முக நூலில் இருக்க மாட்டாரா என்ன ?

இப்போதெல்லாம் கடவுள் இருக்கிறார் என முட்டாள் தனமான கருத்துக்களோடு விவாதம் செய்பவர்களை பார்த்தால் கோபம் தான் வருகிறதுஅதோடு அவர்களின் அறியாமையை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது.

கடவுள் தன் இருப்பை நேரடியாக உணர்த்துவதில் அவருக்கு என்ன சட்டச் சிக்கல் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இல்லை  யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒளிந்து திரிய அவர் என்ன கடன்காரனா ?

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் முக நூலில் இருக்க மாட்டாரா என்ன இந்தப் பதிவை கடவுள் படிக்கட்டும்படித்து விட்டு ரோசம் இருந்தால் அவர் தன் இருப்பை உணர்த்தட்டும்.

அத விட்டுட்டுகல்லை காட்டி மண்ணை காட்டி நாயைக் காட்டி கடவுள்ன்னு நம்ப சொல்றதுஅவருக்கு உருவம் இல்லை புருவம் தான் இருக்குன்னு பீலா விடுறத கேக்கவே கேவலமா இருக்கு. மனிதன் அவ்வளவு அறிவு கெட்டுப் போய்ட்டானேன்னு வருத்தமா இருக்கு.

அறிவு வளர்ச்சி அடையாத குழந்தைப் பருவத்தில் அவர்கள் மனதில் பெற்றோர்களால் விதைக்கப்படுகிற கடவுள் எனும் கற்பனைப் பாத்திரம்அவர்கள் வளந்த பின்னும் அவர்களை யோசிக்க விடாமல் - கேள்வி கேட்க விடாமல் ஆக்கி விடுகிறதுகாரணம் நெடுங்காலமாய் அவர்கள் மனதில் தேக்கி வைத்த சிந்தனை அது. அவர்கள் அதை விட்டு வெளியே வருவதும் அவ்வளவு சுலபமானது அல்ல.

எது நடந்தாலும் கடவுள் செயல்ன்னு சொல்றான்இதை விட பெரிய கொடுமை குழந்தை பிறந்தாக் கூட கடவுள் செயல்ன்னு சொல்றான்குழந்தை பிறந்ததில் கடவுளின் பங்களிப்பு இருக்குன்னு சொல்லிகுடும்பத்துக்குள்ள பிரச்சனைகளை உண்டாக்குறான். எல்லாம் கடவுள் செயல் என்றால் யாருமே வேலைக்கு போகாமல் வீட்டிலே தூங்கிக் கொண்டா இருக்கிறார்கள் ? ?

நாம் பயன்படுத்தும் அத்தனை பொருள்களிலும் மனித உழைப்பும் வியர்வையும் கொட்டிக் கிடக்கிறது. தயவு செய்து எல்லாம் அவன் செயல் எனச் சொல்லி மனித உழைப்பை கேவலப்படுத்தாதீர்கள் .


பாசு . ஓவியச்செல்வன்