Sunday, 19 October 2014

பெண் - கவிதை

” டொக் .. டொக் ... “


” புருஷன் வீடு தான்
இனி உனக்கு எல்லாமே 
பல்லிழந்த வாயிலிருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
கிழவியின் வார்த்தைகள்.


” எல்லாரையும்
அனுசரிச்சு நடந்துக்கணும் 
உடைந்த குரலை
சரி செய்து சொன்னார் அப்பா.



 ” சரி சரி நேரமாச்சி .. 
வேகப்படுத்தினான்
அண்ணன்.



குளமான கண்கள்
நெஞ்சத்தில் பதற்றம்
மகளை கட்டியணைத்த
அம்மாவுக்கு
அழுகையே வார்த்தையானது .



ஆழ அகலமாய்
வேர் பரப்பிய மரமொன்றை
கோடாரி கொண்டு
அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்
பக்கத்து வீட்டில் .

டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
  

-  பாசு . ஓவியச் செல்வன்

No comments:

Post a Comment