Sunday, 5 October 2014

நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போக வேண்டும் - பெரியார்



நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும் ...

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?


-  உண்மை ( மாதமிருமுறை )

No comments:

Post a Comment