சின்னக்குத்தூசி திராவிடரா??
தந்தை பெரியாரின் விளக்கம்.
தன்னையும் ஒரு திராவிடன் என்று கூறிக்கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவானானால் " நீ திராவிடனா?
திராவிடனுக்கு ஏது பூணூல் ? அதை முதலில் கத்தரித்துக்கொள் !" என்போம்.
அதற்கும் துணிவானானால், "திராவிடரில் ஏது நாலு சாதி ? நீ பிராமணன் அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புகொள்" என்று கூறுவோம்.அதற்கு எந்தப்பார்ப்பானும் உடன்பட மாட்டான்.அதற்கு உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால்..
பிறகு நமக்கு அவனைப்பற்றிக் கவலை ஏது ? சாதி வேறுபாடுகள்,உயர்வு தாழ்வுகள்
ஒழியவேண்டும் என்பதுதானே நமது ஆசை.சாதியைக் கைவிட்டு,சாதி ஆசாரத்தைக் கைவிட்டு,"அனைவரும் ஒன்றே" என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம்?
29.9.1948 சிதம்பரம் பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் உரையில் இருந்து.
ஆதாரம் விடுதலை தேதி 5.10.1948
- Arulmozhi Adv
No comments:
Post a Comment