Saturday 4 October 2014

பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவிலுக்கு போறாங்களே ....



பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க
கோவிலுக்கு போறாங்க! அதை உங்களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா?

இந்த வாதமே தனிமனித உரி மையைக் கிள்ளுக்கீரையாக் கருதும் ஆதிக்க கண்ணோட்டமாகும் . என் அப்பா அம்மா பெரும் பக்திமான்கள். ஆனால் நான் பகுத்தறிவாளன். கம்யூனிஸ்ட். பெற்றோரை மதிப்பது வேறு; எனது சுயசிந்தனையும் தேடலும் என் உரிமை. அதை நான் விட்டுக் கொடுக்க வில்லை. என் பிள்ளைகளுக்கும் அவர்கள் பாதையை தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு. மனைவி கணவனை நேசிப்பது வேறு; தன் சுயத்தை இழந்து கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ கண்மூடி பின்பற்றத் தேவை இல்லை . அவர்களுக்கு சுயசிந் தனை, சுய உரிமை எல்லாம் உண்டு. வேடிக்கை என்ன தெரியுமா முற் போக்காளர்கள் மனைவியின் சுய சிந்தனையை சுய உரிமையை மதிக்கிறார்கள். ஆனால் மதம் பெண்களுக்கு சுயம் இல்லை என மறுக்கிறது. மத நம்பிக்கையாளர்களும் பெண்களின் சுயத்தை சுயசிந்தனையை சுய உரிமையை ஏற்கமறுப்பதன் எதிரொலியே மேலே உள்ள கேள்வி. ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கை யுள்ளோராகவோ அறிவியல் பாதையில் நடப்போராகவோ இருக்க முழு உரிமை படைத்தவர்கள். யார் மீதும் யாரும் எதையும் திணிப்பவராக இருக்க முடியாது. திணிப்புக்கு தலைவணங்குப வராகவும் இருக்கக்கூடாது .


குடும்பத்தாரையும் தன் லட்சியப் பயணத்தில் இணைக்க எடுத்துரைக் கலாம். பயிற்றுவிக்கலாம். ஆனால், ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே நேரம் யாரும் பிறருக்காக தன் கொள்கையில் சமரசம் செய்யவும் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை நாட்டுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் தேவை.

- சு.பொ.அகத்தியலிங்கம்

(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)

No comments:

Post a Comment