நேற்று கேப்டன் செய்திகள் சேனலில் நடந்த விவாத நிகழ்வில், ஆத்திகர் ஒருவர் பேசும் போது, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது எங்கள் நம்பிக்கை, அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என வாதிட்டார்.
அவர் சொல்வது சரியா ?
சரி என்றால் ....
1. தமிழ் நாட்டில் பிறந்து - தமிழ் பேசியே வாழ்ந்து பின்னர் இறந்து போன ஒருவருக்கு திதி கொடுக்கும் போது, சமஸ்கிருத மந்திரங்கள் எதற்கு ?
2. பார்ப்பனர்களை வைத்து திதி கொடுத்தால் தான் இறந்தவருக்கு போய்ச் சேருமா ? இது பார்ப்பனர்களின் வியாபாரத் தந்திரம் இல்லையா ?
3. நம் முன்னோர்களுக்கு படைக்கும் படையலை, அவர்கள் காக ரூபத்தில் வந்து சாப்பிட்டு விட்டுப் போவதாக சொல்கிறார்களே,
இது உண்மை என்றால் வீட்டில் லவ் பேர்ட்ஸ் கிளி புறா இவைகளுக்கு பதிலாக காகங்களை [ முன்னோர்களை ] வளர்க்களாமே ?
4 . திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய என்பவர்கள், ஆன்மா என்ற ஒன்று இருக்கிறதா ? அது எங்கு இருக்கிறது என்பதை விளக்க வேண்டாமா ?
தந்தை பெரியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது
” பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும் ”
- பாசு. ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment