சொட்டுச் சொட்டாய் மூத்திரம் இறங்க அந்த வேதனை பொறுக்க முடியாமல் அம்மா...அம்மா...என முனகிக்கொண்டே இந்த நாதியற்ற தமிழினத்தின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தை சுற்றிச்சுற்றி வந்தார் என் இனமீட்பர் தந்தை பெரியார்.
ஆண்டாண்டுகாலமாய் ஆதிக்கம் செலுத்திவந்த ஆரியம் ஆட்டங்கண்டது.
பார்ப்பனர்கள் ஒருபுறம் பணபலம், பத்திரிகைபலம், ஆகியவற்றின் உதவியோடு பூணூலை உருவிவிட்டுக்கொண்டு ஒற்றுமையாக இராஜாஜி தலைமையில் அணி திரண்டார்கள்.
மறுபுறம்-
நிராயுதபாணியாய் தந்தை பெரியார்.
கடுமையான போர் மூண்டது.
என்ன ஆச்சரியம்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக வெல்லமுடியாமல் இருந்த ஆரிய பார்ப்பனர்களை வென்றார் பெரியார்.
பெரியாரின் நண்பரான ராஜாஜி பார்ப்பனர்களின் பிரதிநிதியாக இருந்து பார்ப்பனர்களின் நலனுக்காக பணியாற்றினார்.
ராஜாஜியின் நண்பரான பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களின் நலனுக்காக போராடினார்.
இருவருமே தொண்ணூறு வயதைக் கடந்து வாழ்ந்தார்கள்
இதோ பெரியார் பேசுகிறார்...
"ராஜாஜி செத்த பிறகுதான் நான் சாகணும். நான் செத்தபிறகு ராஜாஜி ஒருநாள் வாழ்ந்தாலும் நாம் பெற்ற உரிமைகள் பறிபோயிடும்"
என் இனத்தின்மீது என்தந்தைக்குத்தான் எவ்வளவு ஆசை...அக்கறை...
இயற்கை பெரியாரின் ஆசையை நிறைவேற்றியது.
நாம் மனிதனாக உலா வருகிறோம்.
அந்த பெரியாருக்காக உழைப்போம்.
அவர் காண விரும்பிய புத்துலகை படைப்போம்.
-R Kalidass
No comments:
Post a Comment