Saturday 4 October 2014

பெரியார் இல்லாமல் போயிருந்தால் .....



அந்த பெரும் கிழம் இட்ட பிச்சை ....

இன்றளவில் பெரியாரை வைவதும் , அந்த கிழத்தை திட்டி திராவிடம் ஒழிக என முழங்குவதும் ஒரு நாகரீகம் ஆகிவிட்டது . அப்படி பேசி, தலையை சிலுப்பி தன் புத்திசாலிதனத்தை காட்டிவிட்டதாக மகிழ்கிறான் .

அமெரிக்க ஜீன்சையும் ,ஆரோ சட்டையும் போட்டுகொண்டு ,பர்கர் சாப்பிடும் பரதேசிகளுக்கு, அக்கிரகாரத்துக்குள் அக்குளில் சட்டையும் ,செருப்பும் அடைத்துக்கொண்டு திரிந்த தன் அப்பனையும் பாட்டனையும் பற்றி கவலை எப்படி வரும் .அந்த வேதனை எப்படி புரியும் ?


சரி "அந்த பெரும் கிழம் இல்லாவிட்டால் வேறு எவருமே வந்திருக்க மாட்டாரா ? தீண்டாமை தீர்ந்து போயிருக்காதா ? பெண்ணடிமை மாறி இருக்காதா ? எல்லா நாட்டிலும் பெரியாரா புத்தி சொன்னார் ?" இப்படி அறிவாளி கேள்வி கேட்க்கும் அன்பர்களுக்கு , அந்த தொண்டு கிழம் இல்லையெனில் இன்னும் இரண்டு தலைமுறை படிப்பற்று போயிருக்கும் .இன்று நீயும் நானும் தச்சனாக, வெள்ளாலனாக எரோட்டியாக, தோட்டியாக குலத்தொழில் செய்திருப்போம் .
அன்று இருந்த சூழலில் கடவுள் இல்லையென்றோ ,பெண் விடுதலை என்றோ சொல்வதே மாபாதகம் .

ஏன் அவரை விமர்சிக்கும் நீங்கள் இப்போது சமகாலத்தில் நடக்கும் கொடுமைகள் ,லஞ்சம் ,ஊழல் ,பாலியல் குற்றங்களை கண்டும் கானது போல போய்கொண்டு தானே இருக்கிறீர்கள் ,போராடவா செய்கிறீர்கள் ?

கடவுளை விடுங்கள் உங்கள் பகுதி எம் எல் ஏ வை எதிர்த்து உன்னால் குரல் தர முடியுமா ?

நான் பிள்ளை ,நான் வன்னியன் ,நான் முதலி ,நான் நாயக்கன் இப்படியெல்லாம் பேசியிருக்க முடியாது ...ஒரே பெயர் சூத்திரன் நீயும் நானும் அவனும் .

குடியானவன் கோயில் கொடிக்கம்பத்தை தான் கும்புட வேணும் என ஒத்துகொள்வாயா நீ ?

சமஸ்கிருதம் இல்லாமல் டிகிரி படித்தாய் அல்லவா ? பேசுவாய் நீ ...
இந்த சுதந்திரமும் அந்த பெரும் கிழம் இட்ட பிச்சை ....

- வரதராஜ் கி
September 1 at 2:44pm

No comments:

Post a Comment