தென் கோடியிலிருந்து
சூரியன்
வடக்கு நோக்கத்
தொடங்கும் நாளை
முதல் நாளாகக் கொண்டு
தானே
ஆண்டைக் கணக்கிட்டனர்
தமிழர் ,
அந்நாள் தை முதல்
நாள் அல்லவா !!
1921 ஆம் ஆண்டிலே,
தமிழாண்டு
தீர்மானிப்பு கருத்தரங்கிலே
மறைமலை அடிகளார்
தலைமையிலே
அய்நூறுக்கும் மேலான
தமிழறிஞர்
பச்சையப்பன்
கல்லூரியிலே கூடினரே,
திருவள்ளுவராண்டின் அடிப்படையில்
தை முதல் நாளே
ஆண்டின் தொடக்கம்
என முடிவு செய்தனரே
...
நீள்வட்டப்பாதையிலே
சூரியனை பூமி சுற்றி
வருகையிலே
பூமியும் சூரியனும்
வெகு அருகே
சந்திப்பது
ஜனவரி மாதத்தில் தானே
...
பிரபவ முதல் அட்சய
வரை
ஆபாசப் பின்னணியுள்ள
ஆண்டுகள் அறுபதும்
ஆகுமா தமிழாண்டு ?
சிந்திப்பாய் தமிழா
அறிவார்ந்த உண்மைகளை,
நிந்திப்பாய் தமிழா
அறிவுக்குப் பொருந்தா
பொய்களை ....
- பாசு . ஓவியச் செல்வன்
No comments:
Post a Comment