1. 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் `` பஞ்சமர்கட்கு இடம் இல்லை'' என்று அச்சிட்டார்கள்.
சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு!
இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்தபோதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல்.
1926 க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) ``மகாத்மா '' காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
3. பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, `` தேச பக்தர்கள்''வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4. 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தைபெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5. 1933 அக்டோபரில் ``குடிஅரசில்'' தந்தைபெரியாரால் எழுதப்பட்ட ``இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?'' என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜதுவேஷம் குற்றம் சுமத்தப் பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தைபெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
6. 1938-இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் புபெரியார்'' என்பது உங்களுக்குத் தெரியுமா?
7. 1960 வாக்கில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட `` சோதனைக் குழாய் குழந்தை'' பற்றி 1938-லேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
8. 1942 ஆம் ஆண்டு கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியதும், அதை தந்தைபெரியார் ஏற்க மறுத்து, பதவியை துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?
9. 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1 இலட்சம் நன்கொடை தந்தபோது-தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?
10. 1951-இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
11. பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்ற வர்கள் அடக்கம் செய்யப்பட்ட தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் சூத்திரர்கள் இடம் என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954 இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
12. 1954 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் தந்தைபெரியாரின் ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு - அங்கே போலீஸ் அதிகாரியின் வீடு இருப்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது என்பதும், தந்தை பெரியார் ஒலி பெருக்கியில்லாமலேயே மாபெரும் கூட்டத்தில் 2 மணிநேரம் உரக்கப் பேசினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
13. வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
14. வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப்புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால் தான் கடைசி நேரத்தில் இதில் காந்தியார் நுழைக்கப்பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?
15. தந்தை பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்த போது போராட்ட வீரர்களுக்கு உணவு வழங்கியவர்கள் சீக்கியர்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
16. தந்தை பெரியாருக்கு வரவேண்டிய கடன் தொகைகளை ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் கோர்ட் மூலம் வசூலிக்க மறுத்தார் என்பதும், அதைத் தமக்கு மாற்றித் தருமாறு சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பார்ப்பன வழக்கறிஞர் கோரிக்கையை பெரியார் புறக்கணித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
17. தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது- பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறி, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு- காங்கிரசிலிருந்து முக்கியப் பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
18. குருகுலப் பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது- பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று காங்கிரஸ் கமிட்டியில் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ஆச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
19. தமிழ்நாடு கதர்போடின் தலைவராக தந்தைபெரியார் இருந்த போது செயலாளராக இருந்த கே.சந்தானம் என்ற பார்ப்பனர், தன்னிச்சையாக பார்ப்பனர்களை ஏராளமாக வேலைக்கமர்த்தியதையும், அதைத் தந்தைபெரியார் கண்டித்ததும் உங்களுக்குத் தெரியுமா?
20. ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன் முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச்செய்தி உங்களுக்குத் தெரியுமா?
21. 1921 இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அமுல்படுத்தியபோது- பார்ப்பனஅதிகாரிகளை ``பிபூ என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை ``எஸ்.பி'' என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டு -பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் சாதிப் பட்டத்தை போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
22. 1921 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி-பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
23. வேலைவாய்ப்பில் மட்டுமன்றி, பதவி உயர்விலும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே, நீதிக்கட்சி ஆணை பிறப்பித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
24. 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தான் ``ஸ்டாப் செலக்ஷன் போர்டு'' ஏற்படுத்தப்பட்டு உத்தியோக நியமனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டது; அதற்கு முன்,அந்தந்த இலாகா மூலமாகவே -பார்ப்பனர்கள் ஏராளமாக வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
25. 1936 ஆம் ஆண்டு நீதிக்கட்சி இனாம்தாரர்கள் கொட்டத்தை அடக்க மசோதா கொண்டுவந்தபோது- அதை நாத்திகர் சட்டம் என்று கூறி பார்ப்பனர்கள் எதிர்த்தனர் என்பதும், கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுத்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
26. நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும என்று இருந்த நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இதன் பொருள் என்ன? பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாகவேண்டும் என்பது தானே!
27. தேவதாசிகள் ஒழிப்பு மசோதா, விபச்சார ஒழிப்பு மசோதாக் களை கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
28. மறவர் சமூகத்தினர் அன்றாடம் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று குற்றப் பரம்பரை பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவலத்தை ஒழித்தது நீதிக்கட்சிதான்
என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
29. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை- முதன் முதலாக அமைச்சர் பதவியிலமர்த்தியது நீதிக்கட்சி தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
30. ஆதிதிராவிடர்(பஞ்சமர்) பொதுத் தெருவிலும் சகலமான சாலை களிலும் நடந்து போகலாம் என்று முதன் முதலில் அதற்கென்றே தனித்த ஆணையைப் பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
31. தொழிற்சங்கத் தலைவராக இருந்த திரு.வி.க.வை நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி வற்புறுத்தியபோது, அன்றைய நீதிக்கட்சி அதை ஏற்க மறுத்ததோடு, திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அறிவித்த வரலாறு
உங்களுக்குத் தெரியுமா?
32. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லோரையும் விட 1916 ஆம் ஆண்டிலே ரூ 10,000 நன்கொடை வழங்கிய-நீதிக் கட்சித் தலைவர் தியாகராயருக்கு விழா மேடையிலே உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளர்க்குகளுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது!
இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
33. நீதிக்கட்சித் தலைவர்-சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் தான் முதன் முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்று உண்மை உங்களுக்குத் தெரியுமா?
34. நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்கார மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன
என்ற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்குத் தெரியுமா?
35. மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை, சட்டம் ஆவதற்கு முன், நீதிக்கட்சித் தலைவரான டாக்டர் நாயர் 1918 ஆம் ஆண்டு லண்டனுக்குத் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல் லாதாருக்கும் சட்டமன்றத்தில் ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தச் சென்றபோது, இங்கிலாந்து அரசாங்கம் அவர் கருத்துத் தெரிவிக்கத் தடைபோட்டதும், தளர்ச்சி அடையாமல் டாக்டர் நாயர், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்துத் தடையை நீக்கச் செய்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் சென்னை திரும்பினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
36. பார்ப்பனர்களுக்காக `` ஹோம்ரூல்'' இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மை யாரின் வண்டவாளங்களை 1918 இல் நீதிக்கட்சித் தலைவரான நாயர் அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை-அந்த அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அதற்காக பாரிஸ்டர் வழக்கறிஞர்களைக் கொண்டு அந்த அம்மையார்-டாக்டர் நாயர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்! டாக்டர் நாயர்-வழக்கறிஞர் யாரும் இல்லாமல் தானாகவே ஆஜராகி அந்த வழக்கில் வென்றார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
37. நீதிக்கட்சித் தலைவரான டாக்டர் நாயர் உடல் நலமின்றி லண்டனுக்கு சிகிச்சைக்கு சென்றபோது- அவர் மரணமடையவேண்டும் என்று பார்ப்பனர்கள் விசேஷ அர்ச்சனை செய்தார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
38. பார்ப்பனரல்லாதார் நலனுக்காக வாதாட லண்டன் சென்ற உடல்நலமில்லாத டாக்டர் நாயர் அங்கேயே மரணமடைந்தார் என்பதும், அப்போது லண்டனிலே இருந்த தமிழகக் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இறந்தவருக்கு மரியாதை தெரிவிக்கக்கூட செல்லவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
39. கோயில் பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளை யடிக்கப்பட்டு வந்து நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925 இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பனகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத் துறையையே
உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
40. இந்தியாவிலேயே - தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச் சகத்தை பனகல் அரசர் தான் நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் உருவாக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
41. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்திரி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 300 ஆகவும் இருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் எழுத அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்திரவு பிறப்பித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
42. 1916 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள்- திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் ``திராவிடர் இல்லம்'' என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒருவிடுதியைத் துவங்கினார்!
ஏன் தெரியுமா?
தமிழ்நாடு முழுவதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்த அனுமதிக்கப்படவில்லை!
1916 ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
43. 1923-இல் நீதித்துறை முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்ததை எதிர்த்து- அந்தத் துறைக்கு மான்யமே கொடுக்கக் கூடாது!
என்று சட்டசபையில் துணிச்சலாக முழக்கமிட்டவர் டாக்டர் நடேசனார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?
44. தாழ்த்தப்பட்ட சகோதரர்களை பு பறையன்'' என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து ``ஆதிதிராவிடர்''என்றே குறிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர். சி. நடேசனார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
45. இன்று பதவிநியமனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ``பப்ளிக் சர்வீஸ் கமிஷன்'' பார்ப்பனர்களின் எதிர்ப்பை மீறி நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் நடேசனாரின் சலியாத உழைப்பால் உருவெடுத்தது என்று வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
46. ஒரத்தநாடு, ராஜாமடம் போன்ற இடங்களில் இருந்த தர்ம சத்திரங்களில்- பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற முறையை மாற்றியவர் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக இருந்த சர்.ஏ.டி பன்னீர்செல்வம் தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
47. நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் - ராமாயணத்தில் பார்ப்பனச் சூழ்ச்சியை நாடகத்தின் மூலம் தோலுரித்துக் காட்டியதால் தான் 1954 - இல் நாடகக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றையே அரசு கொண்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
48. 1935 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதியதோடு டிக்கட்களிலும் அவ்வாறு அச்சிட்டார்கள் என்பதும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த ர.ட.அ சவுந்தர பாண்டியன் தான் அதை ஒழித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
49. முகவை மாவட்ட ஆதிதிராவிடர் மாநாட்டை, சிவகங்கையில் முதன்முதலாக ஏற்பாடு செய்து நடத்தியவர்-சுயமரியாதை வீரர்- ராமச்சந்திரன்(சேர்வை) என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
50. சுயமரியாதை வீரர் ராமச்சந்திரன்(சேர்வை) ஆதிதிராவிடர் கூட்டங்களுக்கு சாதி வெறியர்களின் எதிர்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு, கையில் துப்பாக்கியுடன் வந்து கலந்து கொண்டவர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
51. பு இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்'' என்று பொதுமேடையிலே அறிவித்தவர் தான், அறங்காவலர்குழு, தாலுகா போர்டு தலைவராக இருந்த எஸ். ராமச்சந்திரன் (சேர்வை) என்பது உங்களுக்குத் தெரியுமா?
52. சிவகங்கை சுயமரியாதை வீரரான ராமச்சந்திரனாரை காங்கிரசில் சேருமாறு, சத்தியமூர்த்தி(அய்யர்) வலியுறுத்தியபோது நீங்கள் பூணூலை அகற்றினால் காங்கிரசில் சேருகிறேன் என்று முகத்திலடித் தாற்போல் அவர் பதில் தந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
53. நீதிக்கட்சி அமைச்சரவையில் சேருமாறு சுயமரியாதை வீரர் ராமச்சந்திரனாரை அன்றைய முதல்வர் முனுசாமி அழைத்தபோது, தந்தை பெரியார் கருத்தை ஏற்று இயக்கப் பணியே ஆற்றுவேன் என்று கூறி அமைச்சர் பதவியை மறுத்தவர் அவர் என்ற வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
54. கோவை மாவட்டத்தில் சங்கராச்சாரி சுற்றுப் பயணம் செய்த போது அவரைப் பின்தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் சென்று சங்கராச்சாரியின் வர்ணாசிரம முகத்திரையைக் கிழித்தெறிந்தவர்தான் கைவல்ய சாமியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
55. விருந்தில் - சூத்திரன் என்று சொன்னதற்காக , ஆத்திரமடைந்து சாப்பிட்ட கையுடன் சொன்னவரை அறைந்தவர்தான், சாமி கைவல்யம் என்பதும்,``சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி'' என்ற பழமொழி அதுமுதல் தான் வழக்கத்திற்கு வந்ததும் உங்களுக்குத் தெரியுமா?
56. திருச்சி மலைக்கோட்டை கோயில் பிரவேசத்துக்கு ஆதி திராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் கே.வி. ராமநாதன், டி.வி. சுப்பிரமணியன் ஆகியோர் மலைக்கட்டுப் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாகத் தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
57. 1938 ஆம் ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தின் போது -விடுதலை பத்திரிகைக்கு ரூ 2,000ஜாமீன் கோரப்பட்டு, பத்திரிகை பொறுப்பாளர் ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஆசிரியர் எஸ். முத்துசாமி (பிள்ளை) ஆகியோர் கைது செய்யப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
58. ஈரோடு கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் உரிமைகோரி உள்ளே நுழைந்த மாயூரம் நடராசன், பட்டுகோட்டை அழகிரி உள்ளிட்ட கழகத் தோழர்களைப் பார்ப்பனர்கள் கோயிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
59. 1959 இல் புஆரியமாயை'' நூல் எழுதியதற்காக பேரறிஞர் அண்ணாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
60. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரே 1969 ஆம் ஆண்டில் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் முயற்சியால் அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
61. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமுல் படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே- அன்றைய முதல்வர் ஓமாந்தூரார் ஒரு குழு அமைத்தார் என்பதும் - அந்தத் திட்டத்தைப் பின்னால் வந்த ஆச்சாரியார் கை கழுவினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
62. மடத்தில் நடந்த கொள்ளைகளை ஓமாந்தூரார் முதல்வராக இருந்தபோது தடுக்க முயன்றார் என்பதற்காக தென் கன்னடத்தில் உள்ள பார்ப்பன மடாதிபதி - ஓமாந்தூராரைப் பதவியிலிருந்து இறக்க, பணத்தைக் கொடுத்து சென்னைக்கு ஆட்களை அனுப்பினார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?
63. கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமாந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப் பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்து வந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்
என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
64. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு , பார்ப்பனர் திருவேங் கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என். சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி(ரெட்டி) யாரை தாடியில்லாத ராமசாமி(நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?
65. வெங்கடேசன் என்ற அய்.சி.எஸ் பார்ப்பனர் டில்லிச் செல் வாக்கைப் பயன்படுத்தி - பெரிய பதவிக்குப் போக இருந்ததைத் துணிவோடு தடுத்து நிறுத்தியவர் ஓமாந்தூரார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
66. ஊழல் செய்த அய் .சி.எஸ். பார்ப்பனர்களை துணிந்து கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பியவர் ஓமாந்தூரார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
67. இந்தி திணிக்கப்படுவதால் - ஆபத்து ஏற்படும் என்பதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி - 1926 ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பியவர் தலைவர் தந்தை பெரியார் தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
68. `` 1937-38 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, சட்ட மறுப்புக் காலத்தில் வைசிராயால் பிறப்பிக்கப்பட்ட கிரிமினல் திருத்தச் சட்டத்தை இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள் மீது ஏவினார் பிரதம மந்திரி ராஜகோபாலாச்சாரியார்'' என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
69. 1938. இல் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் பிறப்பித்த இந்தித்திணிப்பு உத்திரவை எதிர்த்து- தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் வெடித்தது; பட்டுக்கோட்டை அழகிரியைத் தளபதியாகக் கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வழிநடைப் பிரச்சாரப் படை 42 நாள்கள் நடந்தே வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
70. 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் வீட்டின் முன்பு அணி அணியாக வீரர்கள் மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள் என்பது.உங்களுக்குத் தெரியுமா?
71. 1939 இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டு சிறையிலே மரணமடைந்த மாவீரன் நடராசனை புஒரு படிப்பு வாசனை இல்லாத அரிஜன்'' என்று சட்டசபையில் சாதியைச் சொல்லி கேலி பேசியவர் ராசகோபாலாச்சாரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
72. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கைதியாகவே வீர மரணமடைந்த மாவீரன் நடராசனை முன் கூட்டியே விடுதலை செய்துவிட்டதாகத் துணிந்து பொய் சொன்னவர்தான் ஆச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
73. 1938 - அல் ஆச்சாரியார் கட்டாயமாக இந்தியைப் புகுத்திய தோடு - இந்தியோடு- சமஸ்கிருதத்தையும் சேர்த்து புகுத்தவேண்டும் என்று `` ஆனந்தவிகடன்'' பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
74. 1938 இல் கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வந்த ராசகோபாலாச்சாரியார் - ஒரு பார்ப்பன துவேஷியும் (தந்தை பெரியார்) ஒரு பண்டிதரும் (நாவலர் சோமசுந்தர பாரதியார்) எதிர்ப்பதற்காக , நான் இந்தியை விட்டுவிடுவதா? என்று ஆணவத்தோடு பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
75. 1938 இல் இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதே - நீதிக்கட்சியின் தலைவராக, நீதிக்கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், மாநாட்டில் தந்தைபெரியார் உருவப்படத்தை வைத்து மாலை போட்டு சர்.ஏ.டி பன்னீர்செல்வம் எழுச்சி உரையாற்றினார் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?
76. 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட தந்தை பெரியாருக்கு ஆச்சாரியார் ஆட்சி 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ . 2000 அபராதமும் விதித்து, தந்தை பெரியார் காரையும் அபராதத் தையும் வசூலிக்க அரசு ஏலத்தில் விட்டது என்ற வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
77. 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்- தந்தைபெரியார் கைது செய்யப்பட்டு 167 நாள்கள் கடும் சிறைவாசம் அனுபவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
78. கட்டாய இந்தியைக் கொண்டுவந்த ஆச்சாரியார் வீட்டின் முன் பட்டினி கிளர்ச்சி செய்த பல்லடம் பொன்னுச்சாமி கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் கோடம்பாக்கத்தில் மறைமலை அடிகளார் தலைமையில் மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள், உடனே புறப்பட்டு ஆச்சாரியார் வீட்டுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
79. 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறையிலே மரணமடைந்த தாளமுத்துவின் சடலத்தை ராஜா சர் முத்தையா செட்டியாரும், முன்னாள் மேயர் பாசுதேவும் தங்கள் தோளிலே சுமந்து சென்றனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
80. தந்தை பெரியார் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டம் நடத்தியபோது போது- அதற்கு எதிராக தார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி அழித்தவர்தான் ம.பொ.சி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
81. 1953 ஆகஸ்டில் சேலம் ரயில் நிலைய இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்துக்கு தந்தை பெரியார் சென்றபோது- அங்கே சில காங்கிரசார் கலந்து கொண்டு போராட்டத்தைத் தடுக்க முயன்று தோல்வி கண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
82. ரயில்வே நிலையங்களில் இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டம் தந்தை பெரியார் காலத்திலேயே மூன்று முறை நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
83. ரயில்நிலைய பெயர்ப் பலகைகளில் இந்தி முதலாவதாகவும், தமிழ் மூன்றாவதாகவும் இருந்த நிலை திராவிடர் கழகம் 1952, 53, 54 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்ததனால் தமிழ் முதல் இடத்தை பெற்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?
84. ரூபாய் நோட்டுகளிலும், நாணயத்திலும் 1950 ஆம் ஆண்டு இந்தி எழுத்துகள் மட்டுமே பொறிக்கப்பட்டதும், பிறகு தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் காரணமாக இது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
85. இந்தியாவை ஆளுவதற்கு இந்தியர்கள் தகுதி பெறவில்லை என்று பிரிட்டிஷ் ஆட்சி சொன்னபோது ஆரியவம்சத்துக்கு அந்தத் தகுதி உண்டு என்று கூறியது தான் காங்கிரஸ் கட்சி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
86. காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட காலங்களில் - அதன் மாநாடு களில் பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசத் தீர்மானம் போட்டு, புயூனியன் ஜாக்'' கொடியும் ஏற்றப்பட்டுவந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
87. 1914 இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 16 பேர்களில் 14 பேர் பார்ப்பனர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
88. 1914 ஆம் ஆண்டிலிருந்து 1937 ஆம் ஆண்டு வரை பார்ப்பனர்களே, பெரும்பாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
89. 1928 இல் பிரிட்டிஷ்- பொருள்கள் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்துவந்த காங்கிரஸ் பார்ப்பனர்கள் -பிரிட்டிஷார் பொருள்களை விளம்பரம் செய்து தரகர்களாக இருப்பதாக ஒப்பந்தம் பேசி, அதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாயை பிரிட்டிஷாரிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
90. வெள்ளையர்களால் -சிறை தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி.க்காக ,நீதிமன்றத்தில் வழக்காட அவரது துணைவியார் நிதி உதவி கேட்டு அறிக்கை விட்டபோது, எந்த காங்கிரசாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
91. அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் காலையில் இந்து மகாசபை மாநாடும், மாலையில் காங்கிரஸ் மாநாடும் ஒரே மேடை யிலேயே நடத்தப்பட்டு வந்தன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
92. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் இனி பார்ப்பனர்களை அமைச்சராகவோ, காங்கிரஸ் தலைவராகவோ நியமிக்கக்கூடாது என்று காங்கிரஸ்காரர்களே மராட்டியத்தில் தீர்மானம் போட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
93. 1953 ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணமே செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
94. புவிடுதலைபு படித்தார் என்ற குற்றச்சாட்டைக் கூறி, சப் மாஜிஸ் திரேட்டை 1965-இல் காங்கிரஸ் ஆட்சி முதல்வர் பக்தவத்சலம் தற்காலிக நீக்கம் செய்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
95. 1901 இந்தியசென்சஸ், சென்னை 15 ஆவது தொகுப்பில் பக்கம் 136 ல் உள்ள சமூக அந்தஸ்து வரிசையில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் வரிசைக்குக்கீழே சற் சூத்திரர்களும், நல்ல சூத்திரர்களும் 31 விழுக்காடு என்று இனம் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
96. கோயிலில் கோபுரங்கள் கட்டி அதில் கடவுள் பொம்மைகளைப் பதித்து வைத்தற்குக் காரணமே, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சூத்திரர்களும், பஞ்சமர்களும் வீதியிலிருந்தபடியே தரிசனம் செய்வதற்குத்தான் என்கிற சாத்திரமும் வரலாறும் உங்களுக்குத்
தெரியுமா?
97. புசூத்திரன் ''சன்னியாசி ஆக உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றமே 1980 இல் தீர்ப்பளித்துள்ளது என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
98. 1932 ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் புபுரத வண்ணான்'' என்ற சாதியினரை கண்ணால் பார்த்தாலே தீட்டு என்று பகல் பொழுதில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்று சாதிக் கட்டுப்பாடு இருந்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
99. 1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத் துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது- அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று- மலம் எடுப்பதிலே கூட தீண்டத்தகாதவர்கள் அக்கிரகாரத்திற்குள்
வரக்கூடாது என்ற பாடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?
100. கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது- நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த கீழ்ச் சாதியைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டே, விசாரிக்கப்பட்டு வந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
101. திருவண்ணாமலை கோயிலில் திரு. கண்ணப்பரை பார்ப்பனர் கள் உள்ளே விடாமல் தடுத்து, கதவை இழுத்து மூடினார்கள் என்பதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
102. புகீழ்ச்சாதி'' என்று சொல்லப்பட்டவர்கள் - அரசாங்கத்துக்கு சம்பளமின்றி வேலை செய்தாக வேண்டும் என்று 1814 இல் திருவிதாங்கூர் அரசாங்கம் உத்திரவு போட்டது என்ற வரலாறு
உங்களுக்குத் தெரியுமா?
103. திருத்தங்கல் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கோயிலுக் குள் நுழையக் கூடாது தேங்காயும் உடைக்கக் கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் தீர்ப்பு வழங்கினார் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
104. திருவாங்கூர் மகாராணியின் முன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவாங்கூர் நிர்வாகம் உத்திரவிட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
105. 1895 ஆம் ஆண்டுகளில்- நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும், இதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
106. 1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபடவந்த நாடார்களை- பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு - அது தொடர்பாக நடந்த வழக்கில் - நாடார்கள் கோயிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
107. வேலை கேட்டு மனுச் செய்த ஒர நாடார் சமூகத்தைச் சார்ந்த டாக்டருக்கு தென்னங்கன்றுகளை வாங்கிக் கொடுத்து, குலத்தொழிலை செய்யச் சொன்னவர், திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி ராமசாமி அய்யர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
108. இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நடப்பதை -1926 ஆம் ஆண்டு கண்டித்து எழுதிய ஒரு பம்பாய் பத்திரிகை மீது பார்ப்பனர்கள் வழக்கு போட்டார்கள் ; அதை எதிர்த்து பத்திரிகையாளரின் சார்பில் டாக்டர் அம்பேத்கரே வாதாடி வெற்றி பெற்றார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
109. உலகப் புகழ்பெற்ற தமிழின அறிஞரான டாக்டர் சர்.ஏ.ராமசாமி முதலியார் மாநகராட்சியில் உரையாற்ற வந்தபோது வரவேற்புப் பத்திரம் ஒன்றை வாசித்து அளிக்க மறுத்த பார்ப்பனர்கள், அதே மாநகராட்சிக்கு அடுத்த நாள் வந்த சிவானந்த சரஸ்வதி என்ற வடநாட்டுப் பார்ப்பனருக்கு வரவேற்புப் பத்திரம் தந்து - விருந்தளித்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
110. இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
111. புஇந்தியாவில் நிதி அமைச்சராக இருந்த சர்.ஆர். கே. சண்முகம்(செட்டியார்) அவர்களை-அவரது சாதியைக் குறிப்பிடும் வகையில் புசெக்கு''படத்தைப் போட்டு பார்ப்பனப் பத்திரிகைகள் கேலி செய்தன'' என்று உங்களுக்குத் தெரியுமா?
112. விவேகானந்தர் ஒரு பார்ப்பனரல்லாத மதத்தலைவர் என்பதால் - அவர் வெளிநாடு சென்று பிரச்சாரம் செய்த பார்ப்பனர்கள் முட்டுக் கட்டை போட்டார்கள் என்பதும், பிறகு ராமநாதபுரம் சேதுபதி உதவி யால் அவர் சிக்காகோ போனார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
113. சிருங்கேரி சங்கராச்சாரியார் தந்தை பெரியாருடன் சமாதானம் செய்துகொள்ள புதிருமுகம்'' அனுப்பி, தந்தை பெரியார் அந்த அழைப்பை உதறித் தள்ளினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
114. 1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் - இரண்டு பார்ப்பனர் கள் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் சாதிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
115. 15-10-1927 இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனியர் சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது தாழ்த்தப்பட்டோர் கோயில் பிரவேசம் சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
116. 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியார் சென்னை வந்தபோது ஆதிதிராவிடர் ஆலயப் பிரவேசத்தை காந்தியார் கைவிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூட்டறிக்கை விடுத்ததோடு காந்தி யிடம் இதை வலியுறுத்துவதற்காக பூரி கோவர்த்தன மட சங்கராச்சாரி
யையும் அழைத்து வந்திருந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
117. புதீக்குறளை சென்றோதோம்'' என்ற ஆண்டாளின் திருப்பாவை பாட்டுக்கு - புதிருவள்ளுவரின் தீய திருக்குறளை ஓதமாட்டோம்'' என்பதே அர்த்தம் என்று பேசியவர் தான் காஞ்சி சங்கராச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
118. பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் - அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்து சாகடிக்கும் இந்துமதக்கொடுமை 1870 ஆம் ஆண்டுதான் சட்டம் போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
119. 1921 ஆம் ஆண்டு ஒரு வயது முதல் 10 வயதுக்குள் பால்ய விவாகம் செய்து - விதவையான சிறுமிகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
120. பெண்களின் திருமண வயது குறைந்தது 14 ஆக இருக்க வேண்டும் என்று சென்னை சட்டசபையில் 1925 ஆம் ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டபோது புதிவான் பகதூர்'' டி ரங்காச்சாரி உட்பட பல பார்ப்பனர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
121. மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
122. நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
123. 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகைஅணியவோ, மாட்டிடமிருந்து பால் கறக்கவோ, ரவிக்கை அணியவோ , இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச்செல்லவோ பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தார்கள் என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
124. சென்ற நூற்றாண்டில் நாகர்கோயில் பகுதியில் குறிப்பிட்ட சில சாதிப்பெண்கள், மார்பை மூடி, ரவிக்கைப் போடக்கூடாது என்ற முறை இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
125. விதவைப் பெண்கள் வேறுசாதியில் திருமணம்செய்துகொள்ளக் கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுதல் முறையை அமுல்படுத்தினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத்தெரியுமா?
126. கேரளாவில் முன்பெல்லாம் எட்டு வயது, பத்து வயதுப் பெண் 100 பேரை உட்கார வைத்து, ஒரு பார்ப்பன நம்பூதிரி என்பவன் அவர்களின் மேல் தண்ணீரை ஊற்றி ஒரே கயிற்றால் முடிச்சுப் போட்டு விடுவான். பிறகு அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு சுத்தியாகி விடுவார்கள். வசதியுள்ளவர்கள், தங்கள் சாதியில் சம்பந்தம் செய்து கொண்டால் மாற்றுக் குறைவு என்று கருதி பார்ப்பானையே வைத்துக் கொள்வார்கள். புஇந்த பார்ப்பானிடம் இந்த நம்பூதியிரிடம் எனக்குச் சம்பந்தம் '' என்று பெருமையாகவே கூறுவார்கள். வாரத்திற்கு ஒரு ஆளை மாற்றிக் கொள்ளலாம் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
127. அன்னை நாகம்மையார் ஈரோட்டில் சட்டமறுப்பு போராட் டத்தில் பங்கு கொண்டபோது 144 தடை உத்தரவு போட்டால் போராட்டம் கடுமையாகி விடும் என்று அதிகாரிகள் அஞ்சி தடை உத்தரவே போடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
128. எப்போதோ ஒரு முறை சில பார்ப்பனர்கள் வருணஜெபம் செய்ததால் தான் மிலட்டூர் என்ற கிராமத்தில் மழை பெய்தது என்று கூறி அந்தக் கிராமமே பார்ப்பர்னர்களுக்கு இனாமாக வழங்கப்பட்டது என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
129. வைணவர்களிலே - வடகலை நாமம் - தென்கலை நாமம் போட்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டால் - அதற்காக உடனே போய் சுவரில் முட்டிக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தில் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
130. நோயினால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனை மோட்சம் அடைவதற்காக கங்கை நீரில் மூழ்கடித்துப் பார்ப்பன புரோகிதர்கள் சாகடித்து வந்தார்கள் என்பதும் ,1863 ஆம் ஆண்டுதான் இதை அரசு உத்திரவு போட்டுத் தடுத்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
131. புபரு கூடத் பன்னம்'' என்ற பெயரில் வயது வந்த இளைஞர்கள் பெற்றோர் சம்மதத்துடன் மலைமீதிருந்து உருட்டி விடப்பட்டு சாகடிக் கப்படும் புரோகிதக் கொடுமைக்கு ஆங்கிலேய அரசு தான் சட்டம் போட்டு முற்றுப்புள்ளி வைத்தது என்ற விவரம் உங்களுக்குத்தெரியுமா?
132. முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் `கங்காப் பிரவாக் பாதனம்' என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835 ஆம் ஆண்டு அரசாங்கம் உத்திரவு போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
133. ரிக் வேதம் கூறியிருக்கிறது என்று அப்பாவியைப் பிடித்து வந்து - அவனை யாகத்தில் பசுவாக்கி - பிறகு மரத்தில் கட்டி கொலை செய்யும் புரோகிதம் கொடுமையை 1845 ஆம் ஆண்டுதான் அரசாங்கம் சட்டம் போட்டு ஒழித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
134. மோட்சம் அடைவதற்காக நீரிலோ நெருப்பிலோ விழுந்து சாக வழி செய்யும் மகாப்ருஸ்தானம் என்ற இந்துமதக் கொடுமையை பிரிட்டிஷ் ஆட்சிதான் சட்டம் போட்டு ஒழித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
135. 1892 - இல் கடப்பை மாவட்டத்தில் பெரும் பதவியில் இருந்த கிருஷ்ணராவ் என்ற பார்ப்பன அதிகாரி தனது செல்வாக்கைப் பயன் படுத்தி, தன்னுடைய 116 உறவினர்களுக்கு வேலை தந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
136. சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று பார்ப்பனர்கள் போற்றிப் பாராட்டும் சீனிவாச சாஸ்திரி, ரங்காச்சாரி, சி.பி. ராமசாமி அய்யர். மணி அய்யர் ஆகியோரெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே சிபாரிசு பிடித்து தங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் கொழுத்த சம்பளத்தில் அரசாங்க உத்தியோகங்களை வாங்கிக் கொண்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
137. திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி ராமசாமி அய்யர்,திருவாங்கூரை இந்தியாவோடு சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
138. வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள்
என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
139. இந்திய குடியரசு தலைவராக இருந்த வி.வி. கிரி என்ற பார்ப்பனர், தான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் பார்ப்பன சமையல்காரரையே உடன் அழைத்துச் சென்றார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
140. எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர்நீதி மன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
141. தேசபக்த திலகமாக காங்கிரஸ்காரர்களால் போற்றிப் புகழப் படும் அன்னிபெசன்ட் அம்மையார் பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலையை ஆதரித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
142.
143. 1925 ஆண்டு காங்கிரஸ்காரரான கோவை அய்யாமுத்து புதுப் பாளையத்தில் நடத்தி வந்த ஆதிதிராவிடர் பாடசாலையில் பார்ப் பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற பாரதி பாடலை மாணவர்கள் பாடி வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைப் பாடக் கூடாது என்று தடை போட்டவர் சந்தானம் அய்யங்கார் என்ற பார்ப்பனத் `தேசியத்' தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
144. 1951 ஆம் ஆண்டு திருவத்திபுரத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பதற்காக பார்ப்பன பள்ளித் தலைமை ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
145. எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் ஆச்சாரியார் எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமாந்தூராரை யும் டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய் போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
146. வடலூர் ராமலிங்க அடிகளாரை தீயில் தள்ளி கொலை செய்து விட்டு, ஜோதியில் கலந்து விட்டார் என்று பார்ப்பனர்கள் கதை கட்டிவிட்டதைத் தொடர்ந்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
147. கி.பி. 1844 இல் பிரிட்டிஷ் கவர்னர் லார்டு ரிப்பன் பதவியை விட்டு விலகிப் போகும்போது பார்ப்பனர்கள் மும்பாதேவி கோயிலிலும், புவனேசுவரர் கோவிலிலும், பூர்ண கும்ப மரியாதை செய்து நெற்றியில் திலகமிட்டு, தேங்காய் பழம் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
148. ``பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துக்களைக் கூறி வந்தார்கள்'' என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
149. கடவுளுக்கு பலியிடும் ஆடு, கோழிகளை வெட்டுவதற்கு முன் அந்த அரிவாளைப் பார்ப்பனர்களின் முன் வைத்து அவர்களுக்குத் தட்சணை தந்தாக வேண்டும் என்ற முறை நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர்களால் அமுல்படுத்தப்பட்டு வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
150. ``காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக பணி யாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கி விட்டனர்'' என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
151. சென்னை கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில்கூட பார்ப்பன மனநோயாளி களுக்குத் தனிப்பிரிவு இருந்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
152. 1943 ல் குடந்தை அரசினர் கல்லூரியில், பார்ப்பன மாணவர் களுக்குத் தனியாகவும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனி யாகவும் குடி தண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்த கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
153. 50 ஆண்டுகட்கு முன்பு ரயில்வே துறை நடத்திய சிற்றுண்டி விடுதிகளில் கூட பார்ப்பனருக்கும் - பார்ப்பனரல்லாதாருக்கும் தனித் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா?
154. பிற்காலத்தில் சென்னை மாகாண முதலமைச்சராக வந்த ஓமாந்தூர் பி. ராமசாமி (ரெட்டி)யாரின் மகனுக்கே சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர் பானையில் தண்ணீர் குடிக்க அனுமதி மறுக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
155. பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு. அய்யர் சாதிவெறியோடு நடத்திய சேரன்மா தேவி குருகுலம் மலேயா நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தந்த ரூ 20,000 நன்கொடையால் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத்தெரியுமா?
156. 1927 இல் தென்காசியில் தேவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம் என்று கூறி பார்ப்பனர்கள் கோயிலை விட்டு வெளியேறியதோடு சாமி புறப்படும்போது தங்களை மட்டும் உள்ளே வைத்துத் தேவார ஓதுவார்களை உள்ளே விடாமல் கதவைப் பூட்டிக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
157. திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகிவிட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
158. 1898 முதல் 1930 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் நியமிக்கப் பெற்ற 9இந்திய நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர் ஒருவர் நாயர். தமிழர் ஒருவர் கூட இல்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
159. 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்த 511 பேரில் 389 பேர் பார்ப்பனர் ; சட்டம் படித்த 54 பேரில் 48 பேர் பார்ப்பனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
160. சென்னை உயர்நீதி மன்றத்தில் 1948 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்கு முன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர்நீதி மன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
161. தலைமைச்செயலகத்தில் அய்.சி.எஸ். தவிர. மற்ற எல்லா உத்தி யோகங்களுமே பார்ப்பனரல்லாதாருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டு மென்று 1921 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
162. புளியங்குடியில் ஒரு பார்ப்பனர் மீது வந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதி பிராமணன் கொலை செய்திருக்கவே மாட்டான் என்று சாட்சிகளைப் பார்க்காமல் இனத்தை மட்டுமே பார்த்து தீர்ப்பளித்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
163. பார்ப்பானுக்குப் பணம் கொடுக்காமல் திதி நடத்துவது சட்டப் படி குற்றமாகும் என்று பம்பாய் ராஜதானியில் சட்டமே கொண்டு வரப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
164. 1929 இல் உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினர்களே, பார்ப்பனர்களுக்குச் சரி சமமாக உட்காரத் தடை விதிக்கப்பட்டனர்
என்பது உங்களுக்குத் தெரியுமா?
165. பார்ப்பனப் புரோகிதர்கள் இந்நாட்டை ஆண்ட மன்னர்களிடமிருந்து தானமாகப் பெற்ற கிராமங்கள் சுமார் 2,840 என்பதும், அவைகளுக்கு `சதுர்வேதி மங்கலங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
166. ``நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள் தான் பார்ப்பனர் களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள்'' என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
167. நாயக்கர் மன்னர் வழிவந்த ராணிமங்கம்மாள் பார்ப்பனர்கள் ஆலோசனைப்படியே வருணாஸ்ரம ஆட்சி நடத்தினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
168. மவுரியர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு மாத ஊதியமாக ரூ 48,000 வழங்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
169. 11 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக்காலத்தில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்ற கிராமத்தில் 140 பார்ப்பனர்களுக்கு வேதம் பயில நாள்தோறும் நெல் அளக்கப்பட்டு 45 வேலி நிலமும் இவர்களுக்கு அரசால் தரப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
170. சோழ மன்னர்கள் புதுவைக்கு அருகே உள்ள திருப்புவனத்தில் பார்ப்பனர்கள் வேதம் படிப்பதற்காகவே 72 வேலி நிலம் ஒதுக்கினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
171. தஞ்சை மன்னனை சத்திரியன் என்று புகழ்ந்து சொத்து சுகங்களைக் குவித்துக் கொண்ட பார்ப்பனர்கள், மன்னரின் சொத்துக் களை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக் கொண்டபோது, பிராமணன், சூத்திரன் என்ற இரு பிரிவு மட்டுமேதான் உண்டு என்று நீதிமன்றத் திலே சாட்சியமளித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
172. 1930- இல் ஆச்சாரியார் சிறை செல்ல நேர்ந்தபோது கட்சித் தலைமைப் பதவியை ஏற்க திரு.வி.க முன்வந்தாலும் அவரிடம் தராமல் சந்தானம் அய்யங்காரிடமே தந்துவிட்டுப் போனார் என்பதும், இப்படிப்பட்ட பல சந்தர்ப்பங்களில் அவர் பொறுப்பை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
173. 1936-37இல் ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங்கூறி கிராமப்புறத்தில் இருந்த 2,200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடிய அதே நேரத்தில் பார்ப்பனர் களுக்கு ரூ 12 லட்சம் செலவில் வேத பாடசாலையைத் துவக்கினார் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
174. மதுவிலக்கைக் கொண்டுவந்த காரணத்தால் அரசுக்கு வருவா யிழப்பு ஏற்பட்டுவிட்டது என்று காரணம்காட்டி அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே,கல்விச் செலவைக் குறைக்க வேண்டி ஏற்பட்டது என்று சாக்குச் சொல்லி 1938 ஆம் ஆண்டிலேயே 2,500 பள்ளிகளை இழுத்து மூடியவர்தான் அப்போதைய சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராசகோபாலாச்சாரி என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆச்சாரியாரின் இந்த சூழ்ச்சியை விளக்கி அப்பொழுதே மது விலக்கின் ரகசியம் என்று குடிஅரசு இதழிலே தந்தை பெரியார் அவர்கள் எழுதியதும் உங்களுக்குத் தெரியுமா?
175. அமைச்சரவையை ராஜிநாமா செய்த பிறகும் ஆச்சாரியாரும் அவரது அமைச்சரவை சகாக்களும் மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும் 1940 இல் பெரியார் எதிர்ப்புத் தெரிவித்த பிறகே, கவர்னர் உத்திரவு போட்டு அதை நிறுத்தினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
176. 1952- இல் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடைந்ததும், எதிர்க் கட்சி உறுப்பினர்களைப் பதவி ஆசை காட்சி இழுத்து- ஆச்சாரியார் கொல்லைப்புற வழியினுள்ளே நுழைந்து காங்கிரஸ் அமைச்சரவை அமைத்ததன் மூலம் கட்சிமாறலுக்கு முதன் முதலாக வழிகாட்டியவர்
ஆச்சாரியாரே என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
177. 1952 - இல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப்பள்ளி மாணவர் களுக்குக் கொண்டுவந்த ராஜகோபாலாச்சாரியார் அந்த சிறுவர்கள் சாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவு போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
178. 1952- இல் திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றை முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும் படிக்கக் கூடாதென்று பகிரங்கமாகப் பேசினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
179. ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பப் பள்ளிப்பாடநூல்களில் அந்தந்த ஜாதிக்காரர்களின் குலத்தொழிலை படத்தோடு போட்டு ஒருமையில் எழுதி அவமதித்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
180. 12 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்ட சேலம் பார்ப்பன சங்கத்தலைவரான ஆர்.வி. கிருஷ்ணய்யர் என்பவரை அவரது 70 ஆவது வயதில் சென்னை சட்டசபை செயலாளராகப் போட்டதோடு அவருக்கு 3 முறை பதவி நீட்டிப்பும் தந்தவர் ராஜகோபாலாச்சாரி என்பது உங்களுக்குத் தெரியுமா?
181. ஆச்சாரியார் உள்நாட்டு அமைச்சராக இருந்தபோது பெங்களூர் ராஜி என்ற பார்ப்பன கொலைக்குற்றவாளியை அன்றைய சபாநாயகர் அனந்தசயன அய்யங்காரைப் பயன்படுத்தி கொலை குற்றத்திலிருந்து விடுவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
182. சர். ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் தங்கியிருந்த காந்தியாரிடம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பற்றிக் கருத்துக் கேட்கப்போவதாகச் சென்ற ஆச்சாரியார் - காந்தியாரிடம் அந்த கொள்கையை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி அதில் சூழ்ச்சிகரமாக வெற்றி பெற்றார் என்ற
வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
183. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர் களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பும் திட்டத்தை, உத்திரவு போட்டு ஒழித்தவர் ராஜகோபாலாச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
184. ராஜகோபாலாச்சாரியார் சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோது தண்ணீர்க் குழாய்களைத் திறந்து விடும் வேலைக்கு ஒரு ஆதிதிராவிடர் நியமிக்கப்பட்டதால் சேலத்தில் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பையும், கூக்குரலையும் கிளப்பினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
185. காந்தியார் மகனுக்கும், ராஜகோபாலாச்சாரியார் பெண்ணுக்கும் நடந்த திருமணத்தில், மணமகன் பார்ப்பனரல்லாதார் என்பதால் அவருக்குப் பூணூல் கல்யாணம் நடத்தி அதற்குப் பிறகுதான் திருமணமே நடந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
186. தங்கம் மற்றும் தச்சு வேலை செய்யும் சாதியினர் தங்கள் பெயருக்குப் பின்னால் ``ஆச்சாரியார்'' என்று போடக் கூடாது ``ஆசாரி'' என்றே போட வேண்டும்(காரணம் ``ஆச்சாரியார்'' என்பது பார்ப்பன சாதிப்பிரிவு) என்று முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி உத்திரவு பிறப்பித்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?
187. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானவுடன் அவர் சாஸ்திரத்தில் பட்டம் பெற்ற சாஸ்திரியே தவிர ``நம் இனத்து சாஸ்திரி அல்ல'' என்று ஆச்சாரியார் கல்கி ஏட்டில் எழுதி பார்ப்பனர்களை எச்சரிக்கை செய்தார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?
188. தேசிய போராட்டத்துக்கு ஆதரவு தராத கோவை வெங்கட்ட ரமண அய்யங்கார் பங்களாவுக்கு காங்கிரஸ்காரர்கள் விருந்து சாப்பிடப் போகக் கூடாது என்று தொண்டர்கள் மறியல் போராட்டம் நடத்தியதை மீறி அவர் வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்றவர் தான் ராஜகோபாலாச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
189. தனது அரசியல் ` சேவைக்குப் ' பரிசாக கிண்டி ராஜ்பவன் தோட்டத்தையே தனக்கு எழுதித் தருமாறு அரசிடம் கேட்டவர்தான் ஆச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
190. கோவிலுக்கு பெண்களை பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி அடிமைமுறையை ஒழிக்கும் மசோதா வந்தபோது அதை மேலவையில் கடுமையாக எதிர்த்துப் பேசியவர் பிரபல தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் !
தந்தை பெரியாருடன் இதுபற்றி ஆலோசனை கலந்து பிறகு அந்த எதிர்ப்புக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பதிலடி கொடுத்தார்!
தேவதாசி முறை நீடிக்க வேண்டும் என்று அய்யர் விரும்பினார் இனிமேல் அவர் இனத்துப் பெண்களே அதைச் செய்யட்டும் என்று முத்துலட்சுமி பதிலடி கொடுத்த பிறகு தான், சத்தியமூர்த்தி வாய் மூடினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
191. பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற 1920- இல் பனகல் அரசர் இந்து அறநிலையத்துறை மசோதாவை கொண்டுவந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்ட சபையிலே காட்டுக்கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
192. சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்குப் போன சத்தியமூர்த்தி அய்யர் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை பெற நீதிக்கட்சித் தலைவர்களிடம் சிபாரிசுக்கு மன்றாடினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
193. சென்னையில் - ராயப் பேட்டை காங்கிரஸ் கமிட்டி கட்டட வாயிலில் வ.உ.சி சிலை வைக்க முயற்சி நடந்தபோது அவரை வகுப்புவாதி என்று கூறி சிலை வைக்க எதிர்ப்புத் தெரிவித்தவர் சத்தியமூர்த்தி அய்யர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
194. ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்திய போது அதைக் கடுமையாக எதிர்த்த தலைவர்களை தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டி, சுட்டுத் தள்ள வேண்டும் என்று பேசியவர்தான் சத்தியமூர்த்தி அய்யர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
195. பார்ப்பனரல்லாத மக்கள் கேட்கும் விகிதாச்சாரத்தை விட அதிக மாகவே அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்னிடம் அதிகாரம் இருந்தால் இதைத்தான் செய்வேன் என்று காந்தியார் பேசினார் (28.8.1920 இந்து ஏடு) உங்களுக்குத் தெரியுமா?
196. வெளிநாடு சென்று வந்தவரென காரணம் காட்டி 1925 ஆம் ஆண்டு கன்னியாகுமரி கோயில்பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு காந்தியாரை பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள் ; கோயிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
197. 1927-இல் விதவைப் பெண்களின் மறுமணத்தை காந்தியார் ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஆத்திரம் அடைந்த பார்ப்பனர்கள், அவர் சென்ற அடுத்த நாளே கும்பகோணத்தில் பொதுக்கூட்டம் போட்டுக் கண்டித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
198. 1927-இல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதி திராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோயிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடி விட்டனர். கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் என்று முழுவதும் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
199. 1927- இல் திருச்சி தேசிய கல்லூரிக்கு வருகை தந்த காந்தி யாருக்கு பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்திலே வரவேற்பு தந்தார்கள் என்பதும் அதைகாந்தியார் எதிர்த்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
200. 10.9.1927 ல் கடலூரில் பேசிய காந்தியார் பிராமணர்களை வேண்டுமானால் கண்டியுங்கள்; ஆனால் பிராமணியத்தைத் தாக்காதீர்கள் என்று பேசிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
201. இளைஞர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளின் பக்கம் ஈர்க்கப்படாமல் இருப்பதற்காகவே, தாம் உப்புசத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடங்கியதாக காந்தியார் கூறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
202. வைக்கம்போராட்ட வரலாற்றை எழுதிய காந்தியார் அதில் தந்தை பெரியார் பெயரை முழுமையாக இருட்டடிப்பு செய்துவிட்டார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
203. பொதுக்கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழி படக்கூடாது அவர்கள் வழிப்படுவதற்கென்றே தனியாகக் கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று காந்தியார் எழுதியதையும், பேசியதையும் கண்டித்து 1929 நவம்பர் 26 `ஜஸ்டிஸ்' ஆங்கில நாளேடுதான்
தனிக்கட்டுரை வெளியிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
204. காந்தியாரின் மூத்த மகன் இந்து மதத்துக்கே முழுக்குப் போட்டு விட்டு முஸ்லீம் மதத்தில் சேர்ந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
205. ராட்டை சுற்றிச் சுற்றி கைவலி ஏற்பட்டு விட்ட தந்தை பெரியாருக்கு கைவலி தீரும் வரை ராட்டை சுற்றாதீர்கள் என்று வேண்டிக் கேட்டுக் காந்தியார் கடிதம் எழுதினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
206. காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
207. காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே பார்ப்பான் தனது படுகொலைக்கு ஆதரவாக கிருஷ்ணனின் கீதை உபதேசத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
208. புதுடில்லியில் காமராசரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து உயிரோடு கொளுத்தத் திட்டம் போட்டது ஆர்.எஸ்.எஸ் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
209. குலத்தொழிலைச் செய்யவேண்டிய கீழ்சாதிக்காரர்கள் சட்ட சபைக்குப் போட்டியிடக் கூடாது என்று பகிரங்கமாகப் பேசியவர் தான் `தேசியத்திலகம்' கோபாலகிருஸ்ண கோகலே என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?
நன்றி - கலை அரசன் வை
|
Sunday, 19 October 2014
தமிழ் நாட்டின் கடந்த கால வரலாறு
Labels:
வரலாற்றுச் சுவடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment