Saturday, 4 October 2014

ஜாதியும் பீகார் முதல்வரும் - கவிதை



ஜாதியா !
இப்ப யாரு பாக்குறா ?
என கொக்கரிக்கும் கோமாளிகளே,

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
பீகாரின் முதல்வருக்கு
நேர்ந்த அவலம் தெரியாதா ?


தாழ்த்தப்பட்ட முதல்வரின் பாதம்
கோயிலுக்குள் பட்டதால்
கோயிலை கழுவியவர்கள்

தாழ்த்தப்பட்ட அரசு அதிகாரிகள்
கையொப்பமிட்ட தங்கள் சான்றிதழ்களை
நீரால் கழுவத் தயாரா ? ?

- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment