Thursday, 12 June 2014

கடவுள் - கவிதை

கற்சிலைகள் முன்னே
உன் துயரங்களை 
பட்டியலிடாதே,
ஏனென்றால்
அவைகளுக்கு
கேட்கும் திறன் கிடையாது ...

- பாசு .ஓவியச்செல்வன்

குழந்தை - கவிதை

பிறந்த
குழந்தையிடத்தில், 
இருக்கிறதா
ஜாதி மத அடையாளம் ?

- பாசு .ஓவியச்செல்வன்

நிலா - கவிதை

நிலவிற்கு
நீயும் நானும்
செல்லத் தடையில்லை,
கோயில் கருவறைக்குள்
நீயும் நானும்
செல்லத் தடையுண்டு ...

- பாசு.ஓவியச்செல்வன்

ஜோதிடம் என்பது உண்மை தானா ?

தயிர் இல்லாமல் தயிர் வடை :

ஜோதிடம் என்பது ஒன்பது கோள்களை வைத்து கணிக்கப்படுகிறது, அந்த ஒன்பது கோள்களில் பூமி இல்லை. பூமியில் வாழும் மனிதனுக்கான ஜோதிடத்தில் - பூமியை தவிர்த்தது சரியா ? தயிர் இல்லாமல் தயிர் வடை சாத்தியமா ? அல்லது பூமி ஒரு கோள் என்பது அவாளுக்கு தெரியாதா ? ? 

நட்சத்திரமான சூரியனும் - துணைக் கோளான சந்திரனும், ஜோதிடத்தில் கோள்கள் ஆனது எப்படி ? ?

ஜோதிடர்களின் கண்களில் பட்ட ராகு - கேது எனும் கோள்கள், இதுவரை எந்த அறிவியலாளர்களின் தொலை நோக்கியிலும் சிக்கவில்லையே ....

பாசு.ஓவியச் செல்வன்

அப்பாக்களின் அடிமைகளாய் அம்மாக்கள்

வீட்டுக்கு வரும்
அழைப்பிதழ்களின் முகப்பை,
அப்பாக்களின் பெயர்களே
ஆக்கிரமித்து இருக்கும்.

எல்லா வீடுகளிலுமே
அம்மாக்கள்,
அப்பாக்களின் சேவகிகளாகவே
வாழ்ந்திருக்கிறார்கள் ....

- பாசு.ஓவியச்செல்வன்



பிரார்த்தனைகள் பயன் தருமா ?

எங்களுக்கு பிரார்த்தனைகள் தேவைப்படுவதில்லை .....

பிரார்த்தனை என்பதே சுயநலத்தின் உச்ச அடையாளம், தன்னையும் - தன் குடும்பத்தையும் - தன் உறவுகளையும் கடவுள் காக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையில் பிரதானமாய் இருக்கிறது. வாழ்வின் மீதான பயத்தை இவர்கள் பிரார்த்தனைகள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள்.

அதே நேரத்தில்,

நாத்திகர்களுக்கு வாழ்வின் மீதான பயம் கிடையாது,
வாழ்வின் ஆபத்தான நகர்வுகளையும் எதிர்கொள்ளக் கூடிய
மன திடத்தை வளர்த்துக் கொண்டவர்கள் நாங்கள், மரணத்திற்குப் பின் சொர்க்க நரகம் குறித்த எதிர்பார்ப்பும் எங்களிடத்தில் கிடையாது,
வாழும் காலத்தில் மானுடப் பற்றை வளர்த்தெடுப்பதே,
எங்கள் வாழ்நாள் பணி.

எனவே எங்களுக்கு பிரார்த்தனைகள்,
ஒரு போதும் தேவைப்படுவதில்லை .....

- பாசு.ஓவியச்செல்வன்

கடவுளை பார்க்க முடியுமா ?

உருவமற்ற ஒருவரை
உங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் 
ஏற்றுக் கொள்வீர்களா ? 
அவருடன் வாழ்க்கை நடத்த முடியுமா ? 

முடியாது தானே !!

ஆனால் உருவமற்ற கடவுள், உலகத்தையும் மனிதனையும் படைத்தான் என்று சொன்னால், அதை கண்மூடித்தனமாக நம்புவீர்கள்.

மனிதன் தன் அறிவை மொத்தமாய் இழப்பது,
இந்தக் கடவுள்கள் விசயத்தில் தான்.

- பாசு.ஓவியச்செல்வன்

கடவுள்கள் பிறந்த கதை

கடவுள்கள் பிறந்த கதை :

உங்கள் முன்னோர்கள் கடவுளை வணங்கினார்கள், அதன் பின் உங்கள் பெற்றோர்கள் கடவுளை வணங்கினார்கள், அதன் தொடர்ச்சியாக இன்று நீங்கள் கடவுளை வணங்குகிறீர்கள், கடவுள்கள் திணிக்கப்பட்ட கதை இப்படித் தான். 
என்றாவது ஒரு நாள் ” ஏன் கடவுளை வணங்க வேண்டும் ? “ என கேள்வி கேட்டது உண்டா ? ஆதிகால மனிதன் அத்தனையையும் பார்த்து பயந்தான், எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அதை எல்லாம் கடவுள் என்றான், இன்று விஞ்ஞானம் எல்லாவற்றுக்கும் விடை சொல்லிக் கொண்டே வருகிறது. 

- பாசு.ஓவியச்செல்வன்

காவல்துறை வளாகங்களில் கோயில் இருக்கலாமா ?

காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை :

காவல்துறை வளாகங்களில் வழிபடும் இடங்களான கோயில் தேவாலயம் (சர்ச்சு) மசூதி ஆகியவை இயங்கி வருகின்றன என்கிற தகவல் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், அறிவுறுத்தப்படுவது என்னவெனில் இத்தகைய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்பதாகும்.

- (ஓம்) கே. இராமனுஜம் காவல்துறைத் தலைமை இயக்குநர்


டாடி... எனக்கு ஒரு டவுட்டு....?

சன் : டாடி டாடி நாமெல்லாம் எப்படி டாடி இந்த பூமிக்கு வந்தோம்...? 

டாடி : நம்மல்ல கடவுள் தாண்ட படைச்சாரு...

சன் : அப்போ நாம எல்லோரும் கடவுளின் பிள்ளை தானே 
டாடி... கடவுளுக்கு முன்னாடி நாம எல்லோரும் சமம் தானே
டாடி?

டாடி : ஆமா...

சன் : டாடி..........! எனக்கு ஒரு டவுட்டு....?

டாடி : என்ன...?

சன் : நாம எல்லோரும் கடவுளின் பிள்ளைனா, அர்ச்சகராகும் உரிமை
பார்பானுக்கு மட்டும் ஏன் டாடி...? சொல்லுங்க டாடி...

டாடி : ....!?

- தளபதி பாண்டியன்

பொங்கல் கவிதை


கவிதை - ராசிக்கல்

சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை .

- பாசு.ஓவியச் செல்வன்

அறிவுப்பூர்வமாக நேர்த்திக்கடன் செய்வது எப்படி ?

பங்குனி திருவிழாவில் உடம்பில் சேறு, சகதி பூசியபடி விசித்திர நேர்த்திக்கடன் ....

” பக்தி வந்தால் புத்தி போகும், 
புத்தி வந்தால் பக்தி போகும் “

- பெரியார்

பேய் விரட்டும் முன் - பேயிடம் அனுமதி கேட்க வேண்டாமா ?

ஓசூர் அருகே கோவில் திருவிழாவில், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடித்து வினோத வழிபாடு செய்தனர்.

” பக்தி வந்தால் புத்தி போகும், 
புத்தி வந்தால் பக்தி போகும் “
- பெரியார்

அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்தால் என்ன நடக்கும் ?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் ஆடிப்பெருக்கையடுத்து, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேங்காய் உடைத்ததில் பலருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்தோடியது. காயம் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

” பக்தி வந்தால் புத்தி போகும், 
புத்தி வந்தால் பக்தி போகும் “
என பெரியார் சொன்னது  எவ்வளவு உண்மை ...

இந்துத்துவா எனும் பயங்கரம்


ஜாதியத்திற்கு எதிரான நேதாஜி

நேதாஜி அவர்களின் படங்களை வைத்துக் கொண்டு ஜாதி அரசியல் செய்யும் அபிமானிகளுக்காக ....

தேவை பெண் விடுதலை

என்றாவது ஒரு நாள்
திருமணச் சந்தையில்
நாம் விற்கப்படுவோம் 
எனத் தெரிந்தே, 
பிறந்த வீட்டின் நாட்களை
பெருந் துயரோடு 
நகர்த்துகிறார்கள்
நம் பெண் பிள்ளைகள் ...

- பாசு. ஓவியச்செல்வன்

குடிக்கும் அப்பாக்கள் - பலியாகும் பிள்ளைகள்

அப்பாவிடம் 
வாங்கித் தரச் சொல்லி
கேட்பதற்கு,
அவளிடம் 
நீண்ட பட்டியலுண்டு.

ஆனாலும்
இதுவரை அவள்,
எதுவும் கேட்டதில்லை.

அவளுக்குத் தெரியும்,
அப்பாவின் பணமெல்லாம்
தினம் ஆல்கஹாலாய்
மாறிப் போகிறதென்று ...

- பாசு. ஓவியச்செல்வன்

உனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்ல ...

உனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லல, சாதியும் பிடிக்காது .. எங்க நம்பிக்கைல ஏன் தலை இடுற.. உனக்கு பிடிக்கலனா அமைதியா இரு அப்டின்னு நண்பர்கள் பல பேரு சொல்றாங்க... நண்பர்களே அவன் அவன் கடவுள கும்பிட்டு சும்மாவா இருக்கீங்க, என் மதத்துக்கு வா, சுகம் அளிக்குறார் , எழுப்புறார், தூங்குறார் அப்டின்னு எத்தன கூட்டம் போட்டு உசுர வாங்குறிங்க... எவனாவது வீட்டுக்குள் கம்முனு கிடகுரிங்குலா? இல்லல... என்னை பேச வேண்டாம் என்பவன் வெளியில் வந்து உன் மதத்தையும், சாதியையும் பேசாதே.. கோவிலை இழுத்து மூடு... நடு ராத்திரில பாட்ட போட்டு குழந்தைகளையும், நோயாளிகளையும் கஷ்ட படுத்துறதா நிறுத்துங்க ... உங்க அழுக்கு மூட்டை மதமும், சாதிய கூட்டங்களும் தினமும் நடக்கும் போது இதெல்லாம் ஒழித்தே ஆக வேண்டும் என்னும் என் கொள்கையை உங்களை விட இரு மடங்கு அதிகமாகவே கத்தி சொல்லுவேன் ....கடவுள் இல்லை கடவுள் இல்லை.. எண்ண இல்லை, கடவுள் இல்லை .. என்ன இல்லை கடவுள் இல்லை

- சாதி மறுப்பாளன் ஜெயசிங்

கல்வி கடவுளாம் சரஸ்வதியின் மகிமை ...

முகநூல் நண்பர் அர்ஜூன் தமிழ் என்பவரின் நியாயமான கேள்வி!

"கல்வி கடவுளாம் சரஸ்வதி எல்லார்க்கும் கல்வி தருபவளாம்.அட பாவிகளா எங்க பெரியாரும் காமராசரும் இல்லனா இங்க யாருக்குடா கல்வி கிடைத்திருக்கும், 19mநுற்றாண்டு வரைக்கும் சரஸ்வதி என்ன பண்ணிட்டு இருந்துச்சு!" 

கேள்வி சரியானதுதானே!

- Natarajan Periyar Thondan

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகள்

மதவாதி
என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது
என்கிறான்

- கவிக்கோ அப்துல்ரகுமான்
" பெரியார் சாக்ரடீசின் உடல் இறுதி அஞ்சலிக்காக பெரியார் திடலில் வைக்கப்பட்டு இருந்த போது, அதில் கலந்து கொண்ட மாற்று கட்சிகள் மற்றும் இயக்கத்தவர்களை வைத்தே அவரது ஆளுமையைப் புரிந்து கொள்ளலாம், யார் எந்த சந்தேகம் கேட்டாலும் சொல்லக் கூடியவர் சாக்ரடீஸ் “

- ஜூனியர் விகடன் ( 21.05.14 )

எல்லாம் ஆண்டவன் செயல் என்பது உண்மையா ?

எல்லாம் ஆண்டவன் செயல் என்றால், சிறையில் இருக்கும் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்து விட்டு, ஆண்டவனைத் தான் சிறையில் அடைக்கணும் ...

அண்ணன் பெரியார் சாக்ரடீசு நினைவேந்தல் நிகழ்ச்சி ...


கடவுளுக்கு சக்தி உண்டா ?

சாமியாடும் போது அக்கினிச்சட்டி ஏந்தும் பக்தர்களே ! அக்கினிச்சட்டி ஏந்துவதற்குப் பதிலாக, வெறுங் கையில் நெருப்பை ஏந்தத் தயாரா ?

நூல் - பக்தர்களே பதில் சொல்வீ ர்

புகை உடலுக்கு பகை

வாயிலிருந்து 
வெளியேறுவது
சிகரெட்டின் 
புகை மட்டுமல்ல,
ஆயுளும்
ஆரோக்கியமும் 
சேர்ந்து தான் ....

- பாசு . ஓவியச்செல்வன்

பெண் சாமிகள்

பெண் சாமிகளுக்கு (சிலை)
ஆண் பூசாரி சேலைகட்டுவது
எந்தவகையில் நியாயம்.

- Vetri Venthan

பெண்கள் காட்சிப் பொருளா ?

பெண்ணொருத்தி 
பருவமெய்தும் 
இயல்பான நிகழ்வை, 
ஊரைக் கூட்டி 
மண்டபம் பிடித்து
பேனர் வைத்து
கறிச் சோறு போட்டு 
திருவிழாவாய் கொண்டாடும் 
காட்டுமிராண்டி சமூகம் இது...

- பாசு . ஓவியச்செல்வன்

பலியாகும் பெண் சமூகம்

விலை போனவளுக்கு
விலை மகள்
என்று பெயர்,
விலை தந்தவனுக்கு
விலை மகன்
என்று பெயருண்டா ?

- பாசு . ஓவியச்செல்வன்

யாரிடம் ஜாதி கேட்க மாட்டார்கள் ?

தவற விட்ட
கைப் பையை
முகவரி தேடிச் சேர்க்கும் 
ஆட்டோ ஓட்டுனரிடம்
கேட்கத் தோன்றுவதில்லை
நீங்கள் எந்த ஜாதியென்று ....

- பாசு . ஓவியச்செல்வன்

இட ஒதுக்கீடு தேவையா ?

ஜாதியின் பெயரால் 
இட ஒதுக்கீடா என
குமுறும் சமூகமே,
காலம் காலமாய்
ஜாதியின் பெயரால்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு,
வேறு எதன் பெயரில்
நீதி வழங்க முடியும் ? ?

- பாசு . ஓவியச்செல்வன்

இஸ்லாமியர்கள் தமிழை நேசிப்பவர்களா ?

எந்த இஸ்லாமியராவது
தங்கள் குழந்தைகளுக்கு
தமிழ்ப் பெயர்
சூட்டுகிறார்களா ?

இல்லையே....

- Vetri Venthan

கவிதை - கடவுள்

என்
உணவு உடை உறைவிடம்
அத்தனையும்
மனித வியர்வையில்
உருவானவை.

இதில்
எதற்கும்
உதவா கடவுள்
எனக்கு எதற்கு ? ?

- பாசு . ஓவியச்செல்வன்

பெரியார் எனும் மாமனிதர்

பெரியார் எனும் 
மாமனிதர் மீது,
அவதூறு புழுதிகளை 
வாரி இறைத்து,
அவர் புகழுக்கு
களங்கம் சேர்க்க 
விழைவோரே !!

புரிந்து 
கொள்ளுங்கள் ...

மக்களுக்கு
பிடித்தமானதை
செய்வது அல்ல
அவர் பணி

மக்களுக்கு
தேவையானதை
செய்வதுவே
அவர் பணி....

என்றும் பெரியார் வழியில்

பாசு . ஓவியச்செல்வன்

பெண்களை மனிதர்களாக அங்கீகரிக்காத இஸ்லாமிய மார்க்கம்

இந்து மதத்தை ( மனு தர்மத்தை ) விமர்சனம் செய்கிறேன் என்பதால் இஸ்லாமிய மதத்தையும் கிருத்துவ மதத்தையும் ஆதரிக்கறேன்னு அர்த்தம் இல்லை நண்பர்களே . 
ஒரு இழிவை கண்டித்து விமர்சிக்கையில் விழுந்தடித்து 
80 shares. பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள் !!

அட அப்ரசண்டிகளா, பெண்களை மனிதர்களாக அங்கீகரிக்காத இஸ்லாமிய மார்க்கத்தையோ, இல்லை மூடநம்பிக்கைகளின் புகலிடமாக மக்களின் அறிவை மழுங்கடிக்கும் கிருத்துவ மதத்தையோ எதிர்க்கவில்லை என்று நினைத்துவிட்டீர்களா ? அப்படி காட்டமாக அந்த மதங்களின் அக்கிரமங்களை எழுதும் போதும் ஏகோபித்த ஆதரவை தருவீங்களா அப்ரசண்டிகளா ? மிடில !

- Meena Somu

ஓம் சக்தி

அறிவாளி கண்டுபிடித்தது
மின்சக்தி....
அடிமுட்டாள் கண்டுபிடித்தது
ஓம்சக்தி....

- Vetri Venthan

கிரகணம் ஏற்படுவது எப்படி ?

கிரகணம் :

பாம்பு சந்திரனை விழுங்குகிறது,
அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.

பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவதால் கிரகணம் ஏற்படுகிறது என்கிறது அறிவியல். 

- "விடுதலை” 21-9-2012

தலித் என்பதை கண்டுபிடித்து விட்டால் இழிவாக நடத்துவார்களோ ...

நானும் திலகமும் சாதி மறுப்பு திருமணம் செய்து இருப்பது பலருக்கும் தெரியும்.நான் தலித் சமுகத்தை சேர்ந்தவன்.திலகம் தலித் அல்லாதவர்.

சின்ன வயதில் பல்வேறு சாதி கொடுமைகளை நேரடியாக சந்தித்து இருக்கிறேன். எனது குழந்தை பருவத்தில், நம்மை யாராவது,தலித் என்பதை கண்டுபிடித்து விட்டால் ,இழிவாக நடத்துவார்களோ என்று அச்சப்பட்டு இருக்கிறேன்.எனது அடையாளத்தை மறைத்து இருக்கிறேன்.ஒருவிதமான உளவியல் சிக்களில் தவித்து இருக்கிறேன். இது போன்றுதான் எல்லா தலித் குழைந்தைகளும் அனுபவித்து இருப்பார்கள்.

சமிபத்தில் கவின் என்னிடத்தில், தலித் என்றால் யார் அப்பா.. அது குறித்து தெளிவாக சொல்லுங்கள் என்றான். திலகமும் நானும் எளிதாக கூறினோம். இறுதியில் யாரையும் பாகுபாடு காட்டகூடாது என்றும் கூறினோம்.கவின் என்ன நினைத்தானோ..தெரியவில்லை.பாகுபாடு காட்டுபவர்கள் தலித் கிடையாது.அதில் பாதிக்க படுபவர்கள்தான் தலித் அப்படிதானே என்றான். நாங்கள் இருவரும் ஆமாம் என்றோம். குற்றம் செய்பவர்கள் கெட்டவர்கள். பாதிக்கபடுபவர்கள் நல்லவர்கள். தலித்தாக பிறப்பது நல்லதுதானே....அப்பறம் ஏன் ப்பா....சின்ன வயதில் வருத்த படவேண்டும்.பெருமைபடுங்கள் அப்பா என்றான்.

தலைமுறை கண்டிப்பாக மாறும்.மாற்றும்.

- Evidence Kathir

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,

வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.

தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

- வே.மதிமாறன்

ஜாதிகளை உண்டாக்கியது யார் ?

ஜாதிகள் பார்ப்பனரால் (ஆரியர்களால்) ஏற்படுத்தப்பட்டவையேயாகும். 

ஆரியர் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் 
நம் நாட்டில் ஜாதி என்பதே கிடையாது.

- தந்தை பெரியார்

காசி ஆனந்தன் கவிதைகள்


திருமணத்தில் பெற்றோர்களின் தலையீடு சரியா ?

மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.

அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும். 

- தந்தை பெரியார் ( `விடுதலை, 23.7.1971 )