Thursday, 12 June 2014

தலித் என்பதை கண்டுபிடித்து விட்டால் இழிவாக நடத்துவார்களோ ...

நானும் திலகமும் சாதி மறுப்பு திருமணம் செய்து இருப்பது பலருக்கும் தெரியும்.நான் தலித் சமுகத்தை சேர்ந்தவன்.திலகம் தலித் அல்லாதவர்.

சின்ன வயதில் பல்வேறு சாதி கொடுமைகளை நேரடியாக சந்தித்து இருக்கிறேன். எனது குழந்தை பருவத்தில், நம்மை யாராவது,தலித் என்பதை கண்டுபிடித்து விட்டால் ,இழிவாக நடத்துவார்களோ என்று அச்சப்பட்டு இருக்கிறேன்.எனது அடையாளத்தை மறைத்து இருக்கிறேன்.ஒருவிதமான உளவியல் சிக்களில் தவித்து இருக்கிறேன். இது போன்றுதான் எல்லா தலித் குழைந்தைகளும் அனுபவித்து இருப்பார்கள்.

சமிபத்தில் கவின் என்னிடத்தில், தலித் என்றால் யார் அப்பா.. அது குறித்து தெளிவாக சொல்லுங்கள் என்றான். திலகமும் நானும் எளிதாக கூறினோம். இறுதியில் யாரையும் பாகுபாடு காட்டகூடாது என்றும் கூறினோம்.கவின் என்ன நினைத்தானோ..தெரியவில்லை.பாகுபாடு காட்டுபவர்கள் தலித் கிடையாது.அதில் பாதிக்க படுபவர்கள்தான் தலித் அப்படிதானே என்றான். நாங்கள் இருவரும் ஆமாம் என்றோம். குற்றம் செய்பவர்கள் கெட்டவர்கள். பாதிக்கபடுபவர்கள் நல்லவர்கள். தலித்தாக பிறப்பது நல்லதுதானே....அப்பறம் ஏன் ப்பா....சின்ன வயதில் வருத்த படவேண்டும்.பெருமைபடுங்கள் அப்பா என்றான்.

தலைமுறை கண்டிப்பாக மாறும்.மாற்றும்.

- Evidence Kathir

No comments:

Post a Comment