Thursday, 12 June 2014

மொழி பற்றிய பெரியாரின் பார்வை ....

மொழி பற்றிய பெரியாரின் பார்வை ....

மொழி பற்றிய பெரியாரின் பார்வை பிழையானது என்று பெ.மணியரசன் அவர்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள். மொழிப் பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது:

“ மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க ‘மொழி’ முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறா விட்டாலும் ‘ஒலிக் குறிப்பு’ என்று கூறலாம் ”.

இப்படி மொழிப் பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், “ஒருவரை பார்த்து, ‘உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, ‘நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது”.

- கவி, சிங்கப்பூர்.

No comments:

Post a Comment