Thursday 12 June 2014

தமிழருவி மணியன் இப்படி பேசலாமா ?

யார் என்ன உடை அணிய வேண்டும் என்று தீர்மானிக்க 
இவர் யார் ? ? ?

தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பெறுமானம் உள்ளதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் - ,தமிழருவி மணியன் //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
திருமாவளவனைத்தான் இவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.யார் என்ன உடை அணிய வேண்டும் என்று தீர்மானிக்க இவர் யார்?கதர்ச்சட்டை அணிவதும்,அதை பராமரிப்பதும் சாதாரண விஷயமல்ல,பெரும்பாலும் கதர்,காட்டன் துணிகளை அணியும் நான் நன்றாக அறிவேன் அந்த துணிகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினமான காரியம் என்று.

கதர் துணி குறித்து தந்தை பெரியார் சொன்ன விஷயம் இது,துவைத்து,கஞ்சி போட்டு இஸ்திரி செய்து அணிந்தால் செலவும் அதிகம்,நேரமும் விழுங்கும்,எனவே கதர்ச்சட்டைகள் அணியாதே என்று கூறினார்.

கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் /////////அப்போ உழைக்கும் மக்கள் தலித்துகள் மட்டும்தானா?ஏனைய சமுதாய மக்கள் உழைப்பதில்லையா?உழைக்கும் மக்கள் நிறைந்து இருப்பதால் அந்த சமுதாய மக்கள் பேண்ட்,சர்ட் அணியக் கூடாதா?

பர்சனாலிடி ஸ்பீக்ஸ் என்று சொல்வார்கள்,அண்ணல் அம்பேத்கர் கூட கண்ணியமான உடைகள் அணிவதிலே கவனம் செலுத்தினார்,தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் கூட கோட்சூட் தான் அணிந்தது மட்டுமின்றி தலித் மக்கள் கண்ணியமான உடைகள் அணிவதும் நுனி நாக்கு ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்வதும் அவசியம் என்று வலியுறுத்தினார்.ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்பட்ட துருக்கியின் தந்தை எனப் போற்றப்படும் முஸ்தபா கமால் பாஷா கூட தன்னுடைய மக்கள் மேற்கத்திய கனவான்கள் போல் உடையணிவதையும்,தாடி மீசை மழித்து பொலிவான தோற்றத்துடன் இருப்பதையும்,கல்வி கற்பதையும் ஊக்குவித்தார்.

நிலைமை இப்படி இருக்க இந்த கதர்ச்சட்டைக் கோமாளி தலித் தலைவர் ஒருவரின் உடை குறித்து பேசுவது கேலிக்கூத்து.

எந்த வெள்ளைக்காரனாவது என்னைப் போல் கோட் அணியாதே,பேண்ட் போடாதே,ஷூ போடாதே,டை கட்டாதேன்னு சொல்லியிருக்கானா? நீங்க மட்டும் ஏன்யா அடுத்தவன் உடையை கண்காணிக்கறீங்க?

தலித்துகள் துண்டை இடுப்பில் கட்ட வேண்டும்,செருப்பை அக்குளில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் பழமைவாத சாதிவெறியனுக்கும் தமிழருவி மணியனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

திருமாவளவன் பேண்ட்டையும் கழட்டி என்ன ஜட்டி போட்டிருக்காருன்னு பார்த்திடுங்கப்பா,குரொக்கடைல் ஜட்டியாக இருந்தால் அதுக்கும் ஒரு கண்டனம் தெரிவித்து விடுவோம்.

நன்றி - யுவான் சுவாங்

No comments:

Post a Comment