Thursday, 12 June 2014

கவிதை - ஜாதி மதம்

இறந்த மனிதனிடம் 
நீ எந்த மதமென்றேன்
மெளனமாய் இருந்தான்.

நீ எந்த ஜாதியென்றேன் 
மெளனமாய் இருந்தான்.

பின் அவனுக்கு
அவர்கள் ஜாதிய வழக்கப்படி
சடங்குகள் செய்து,

அவர்கள் மத வழக்கப்படி
அவர்கள் கல்லறையில்
புதைத்தார்கள் ...

- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment