Sunday 17 August 2014

திராவிடத்தால் வீழ்ந்தோம் ? ? ?

திராவிடத்தால் வீழ்ந்தோம்
------------------------------------------------

தமிழ் தேசியம் என்ற பேரில் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற நூலை குணா எழுதியுள்ளார்//

அவர் தேவணாய பாவணரின் நினைவாக எழுதிய நூல் என்று முன்னுரையில் எழுதியுள்ளார். பாவணரை வைத்தே நிருபிக்கிறேன் இவன் புலுகலை.
---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் 1:

பார்பனர் வேறு, ஆரியர் வேறு - புலுகல் குணா

பார்பணர் ஆரியரே- மொழி ஞாயிரு பாவணர் (ஆதரம்: ஒப்பியம் மொழி இலக்கணம்)

ஆரியர் என்பது பிராமனரே- பாவணர் (ஆதரம்: தமிழ் மதம்)

ஆரியச்சார்பினால் தமிழ் கெட்டதுமின்றித் தமிழ்ர் தம் தாய்மொழி உணர்ச்சியும் இழந்தனர். அதனால் தமிழர் தாழ்வுற்றனர்- பாவணர் (தமிழர் வரலாறு)
---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் :2

ஆரியக் கொள்கையும், பண்பாடும் புத்த ஜைன மதங்களால் தமிழகத்திற்கு கொண்டு வந்தன.- புலுகன் குணா.

ஆரிய மதத்திற்கு எதிராய் வந்தவை புத்தமும், சமணமும்- பாவணர் (ஒப்பியன் மொழி நூல்)

கைபர் கணவாய் வழியாக ஆரியன் வந்ததாக வரலாறுகளே இல்லை இப்படி பொய்யான மோசடியை கூறி பெரியார் தமிழ் மக்களை ஏமாற்றினார். -புலுகன் குணா

ஆரியர்கள் ஆசியானின்று பால்டிக் நாடுகளிலும் கண்டினேவிய நாட்டிலுமே இருந்தது அங்கே ஆரிய மொழிகள் எழுந்தது. ஆரியர்கள் சிந்து நதி வழி கடந்து இந்தியவிற்கு நொழைந்தனர், பாரசீகர் சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தாங்கள் சிந்துவை ஹிந்து என மாற்றினர் பின்பு கிரேக்கர்கள் இந்தி என்ற் திருத்தி கடைசியில் இந்தியா என்று ஆனது- பாவணர் (ஒப்பியின் மொழி நூல் ஆய்வு நூலில் கூறியிருப்பதாவது -பக்கம் 20-27)
---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர்
ஆரியர்கள் தமிழகத்தின்மீது படை கொண்டு படையெடுத்த வராலாறு ஏதும் இல்லை!-புலுகன் குணா

ஆரியத்திற்க்கும்-பழங்க்குடிக்கும் இடையில் நடந்த போரெல்லாம் ஆரியர்க்கும் -அவர்களை ஏற்க்காதவர்களுக்குமானப் போர்- பாவணர் (தமிழர் மதம்)

---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் :4

தமிழனை தவிர மற்ற மாநிலத்தாரையே பெரியார் உயர்த்த என்னினார்- புலுகன் குணா,

தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமான் அல்ல, மலையாளியும் தான் அதிகாரி: இனி அதற்கு இடமில்லை (ஈ வெ ரா சி:பக்கம் 692)

தமிழன் முதலமைச்சராக வந்திருக்கிறார் என்று உணர்வு பொங்கி கூறி மகிழ்ந்தவர் பெரியார்- (ஈ வெ ரா சி. ப.831)

தமிழ் படிக்க, பேச, எழுத, தெரியாத மலையாளத்தானும், கன்னடனும், தெலுங்கனும், தமிழ் நாட்டில் ஜில்லா உத்தியோகத்தில் இருந்தால் எந்த விதத்தில் மொழியை இந்த அரசாங்கம் ஆதறிக்கிறது என்று சொல்ல முடியும். (வெளி மாநிலத்தாரை அரசு பணியில் அமர்த்துவதை கண்டித்து 22.04.1955-இல் பெரியார் விடுத்த அறிக்கை)

பெரியார் இறந்து 40 ஆண்டுகள் ஆகிறது, இந்த 40 ஆண்டுகளில் தானே மற்ற மாநிலத்தார் ஊடுருவல் அதிகம் நடந்துள்ளது, பெரியாரை குறைச்சொல்லும் கழிசடைகள் இதை தடுக்க கிழித்தது என்ன?

---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் :5

தமிழ் வேறு திராவிடம் வேறு/ பெரியார் தமிழ் தேசியம் அமைக்க முற்படாமல் தெரியாத திராவிடத்தை எடுக்கவே தமிழ் தேசம் கிடைக்காமல் போனது-புலுகன் குணா.

தமிழே. திரா விடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட -திராவிடம்.-மொழி ஞாயிரு பாவணர். ஒப்பியன் மொழி நூல் பகுதி-1, பக்கம்-15, தமிழ்மண்-ஆய்வு நூல்)

---------------------------------------------------------------------------------------------------------------------

பெரியாரை பற்றி உண்மையான தமிழ் உணர்வாளர்கள்
***********************************************************************

''மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை?''

- காசி ஆனந்தன்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

-புரட்சிக்கவிஞர்.

“தமிழன் விடுதலை தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்.-

-மொழி ஞாயிரு தேவணாய பாவணர்

தமிழினத்தை காக்க, முன்னேற்ற மூவர் தோன்றினர்கள் அவர்கள் திருவள்ளுவர், மறைமலையடிகள், மற்றும் பெரியார்-
பெரியாரிடம் உள்ள விஷேச குணம் என்னவென்றால், மனத்திற்கப்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தமக் குணம் தான்

- வ .உ.சி

-புரட்சிக்கவிஞர்.
-காசி ஆனந்தன்.
-மொழி ஞாயிரு தேவணாய பாவணர்
- வ.உ.சி

இந்த தமிழர்களை விடவா? உணர்வாளர்கள் பெரியாரை ஏசும் இந்த பார்ப்பன கைகூலிகள்…

உருவாக்கியது- திலீபனின் மகேந்திரன்

2 comments:

  1. தமிழே திராவிடமாக திரிந்தது என்றால் பௌதீகமாக மொழி திரியுமா? சித்தூர், பெங்களூர், எல்லாம் தமிழகத்தில் இருந்து வெறும் 50 கிமீரே? ஒருவரின் கருத்தை உங்கள் பகுத்தறிவுக்கு ஆய்வு செய்யுங்கள் அதை விட்டு விட்டு தரைகுறைவாக பதிவு செய்ய வேண்டாம்.

    ReplyDelete
  2. *தமிழ் மொழி வரலாறு*
    *திராவிடத்தால் வீழ்ந்தோம்*
    திராவிடத்தால் வீழ்ந்தோம்
    கடைச்சங்க காலத்திலிருந்து மாலிகாபூரின் படையெடுப்புக்கு முன்னால் வரை எந்த வடவரும் தமிழகத்தை வெற்றி கொண்டதும் இல்லை அதன் மீது படையெடுத்ததும் இல்லை. மாறாக தமிழ்ப் பேரரசர்களே வடக்கு நோக்கி படை செலுத்தி வெற்றிக்கொடி நாட்டிய வரலாறுகள் உண்டு. ஆனால் வடஇந்தியாவில் 
    விந்தியமலைக்கு அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை 
    வைத்து அந்த வடஇந்திய வரலாற்றை சென்ற 2000 
    ஆண்டுகாலத் தமிழக வரலாற்றின் மீது கண்மூடித் தனமாக 
    திணிப்பது பெருந்தவறு. 

    ஆரியர்களோ தங்களை ஆரிய வழியினரென சொல்லிக்கொண்ட வடவரோ தமிழகத்தின் மீது படை கொண்டு படையெடுத்த வரலாறே இல்லை.ஆனால் சைனம், பவுத்தம் ஆகிய ஆரிய மயமான சமயங்களின் வழியாக மட்டுமே ஆரியக் கொள்கையும் பண்பாடும் தமிழகத்திற்குள் புகுந்தன. ஆனால் ஆரியம் வேறு 
    திராவிடம் வேறு எனும் வேற்றுமை தெரியாத திராவிடக் 
    கொள்கையர் அவ்விரண்டும் ஒன்றே எனக் கருதிமயங்கியது இங்கு பெரும் கேட்டை விளைவித்துள்ளது

    இத் திராவிடக் கொள்கை ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ எடுபடவில்லை. கட்சியையும் சாதியையிம் மறந்து தெலுங்கரெல்லாம் ஆந்திர மகாசன சபாவின் கீழும், மலையாளிகள் கேரள சமாசத்தின் கீழும் ஒன்று திரண்டனர். கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழரை மட்டுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனப் பிளவுபடுத்தினர். 
    இதனால் மற்றவர்கள் இன வழியல் ஒன்றுபட, தமிழர்கள் 
    மட்டுமே சாதியால் மென்மேலும் கூறுபட்டனர். உள்ளபடியே தமிழ்ப்பார்ப்பனரை எல்லாம் அரசுப் பதவியிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் அந்த இடங்களில் போய் தாங்கள் அமர்வதற்கான ஒரு நொண்டிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

    தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என 
    அழைத்துக்கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான். 

    தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும், தமிழினத்தின் மூத்த 
    குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர். 

    அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிறரை சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க. 

    இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டுவிட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே 
    ஏதிலி (அகதி) களாக்கபபடடுள்ளனர் 

    பேராசிரியர்- குணா

    ReplyDelete