Saturday, 23 August 2014

இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை ....



காதல் திருமணங்களில், ஆண் ஆதிக்க ஜாதியாக இருந்து, பெண் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அந்த திருணங்களை தன் ஜாதிக்கு ஏற்பட்ட கலங்கமாக ஆதிக்க ஜாதிக்காரர்கள் பார்ப்பதில்லை.

காரணம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்வதை, தனது ஜாதி திமிர்களில் ஒன்றாக கருதுவது இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை.

ஒருவேளை, தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பது பிரச்சினையானலும், அது மகனுக்கும் அப்பனுக்குமான சண்டையாக முடிந்து, மகன் வீட்டை விட்டு வெளியேறுவதோடு முடிந்துவிடும்.

மாறாக, பெண் ஆதிக்க ஜாதியாகவும், ஆண் தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால், அந்த திருமணச் சண்டை குடும்ப சண்டையோடு முடிவதில்லை. அந்தச் சேரியில் உள்ள ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதலாக வடிவம் பெறுகிறது.

- வே.மதிமாறன்

No comments:

Post a Comment