Saturday 16 August 2014

ஜாதி - கவிதை

எங்கிருந்து வந்ததடா...


நானும் நீயும் நாலாஞ்ஜாதின்னு
சொன்னவனை விட்டுவிட்டு
நமக்குள்ளே கொளுத்திக்கிட்டா
நல்லாதான் அவன் குளிர்காய்வான்...
எங்கிருந்து வந்ததடா உனக்குள்ளே ஜாதிவெறி!

ஓடி, ஓடி களையெடுத்தோம்!
ஒண்ணா நாம் நெல்லறுத்தோம்!
நேற்று வரை அக்கா, தங்கை
இன்று அவள் தாசிமகளோ?

இதுவரை நடக்கலையா?
நமக்குள்ளே திருமணங்கள்
நாமெல்லாம் மாமன் மச்சான்
ஈனர்களுக்கு பொறுக்கலையே
இதப் புரிஞ்சுக்கிட்ட நமக்குள்ளே... வெறுப்பில்லையே!

- நா. சுப்புலட்சுமி, திருப்பத்தூர் (வே.மா)

No comments:

Post a Comment