Sunday 17 August 2014

ஈழமும் திராவிடர் கழகமும் ...

தமிழத் தேசியர்களே உங்களில் யாராவது இத்தனைமுறை
--------------------------------------------------------------------------------------------------

ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சிறைப்பயணம்

1. 23.01.1983 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக் கொடி காட்டியதற்காக கைது.

2. ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஆகஸ்டு 15 ஆம் தேதியை துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக் கொடி ஏற்றியதற்காக 1984 ஆம் ஆண்டு கைது.

3. ஈழத்தில் இராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக்குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு 7.9.1984 ஆம் ஆண்டு கருப்புக்கொடி காட்டியதற்காக சென்னையில் கைது.

4. 20.2.1987 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தூத்துக்குடியில் நடைபெற்ற கப்பல் மறியல் போராட்டத்தில் கைது.

5. 1.6.1987 ஈழத் தமிழர் பிரச்சனைக்காக சென்னையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கைது.

6. 2.8.1987 ஆம் ஆண்டு ராஜூவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகலை எரித்ததால் சிறை.

7. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 26.10.87 முதல் 4.1187 வரை சிறை.

8. 25.01.1988 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம். இதனால் கைது.

9. 21.3.1988 இல் ஈழத் தமிழருக்கு துரோகம் செய்து மதச்சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி சென்னையில் கைது.

10. 10.09.1988 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்சென்றபோது கைது.

11. 31.08.1995 ஆண்டு ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது.

12. 23.09.2008 ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கைது.

13. 02.09.2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கைது.

14. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கடந்த ஆண்டு டெசோ சார்பில் நடந்த போராட்டத்தில் கைது.

பொது வாழ்வில் தமிழர் நலனுக்காக 48-க்கும் மேல்பட்டமுறை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறை சென்றுள்ளார். அதில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக 14-க்கும் மேல்பட்ட முறை சிறை... தமிழத் தேசியத் தலைவர்களே ஈழத் தமிழர் பிரச்சனைக்காக எத்தனைமுறை சிறை சென்றிருக்கிறீர்கள். இவை சிறைபட்டியல் மட்டுமே.... விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வந்து முதலில் சந்தித்த தலைவர் கி.வீரமணி என்பதும்.... இன்னும் ஏராளமான வரலாறுகளும் திராவிடர் கழகத்திற்கு உண்டு.... அந்த நெடிய வரலாறும் இணைக்கப்படும்.

- இளந்திரையன் தமிழ்மாணவன்

No comments:

Post a Comment