Saturday, 23 August 2014

பெரியார் கொள்கை பரப்பும் பணியில் தமிழர் தலைவர் கி. வீரமணியின் அளப்பரிய பங்கு ...

பெரியார் கொள்கை பரப்பும் பணியில் 
தமிழர் தலைவர் கி. வீரமணியின் அளப்பரிய பங்கு ... 

பெரியார் கொள்கை தாங்கும் நூல்களை தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எல்லாம் வெளியீடு. 

விடுதலை எட்டுப் பக்கம் ஆனதும், இரு இடங்களில் பதிப்பு என்று ஆக்கப்பட்டதும்,

பெரியாருக்குப் பின் உண்மை மாதம் இருமுறை ஆனதும்,

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ் மீண்டும் கொண்டு வரப்பட்டதும்,

குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழ் ஆரம்பிக்கப்பட்டதும்,

பாமர மக்களும் தந்தை பெரியார்பற்றி அறிந்துகொள்வதற்குப் பெரியார் திரைப்படம் எடுக்கப்பட்டதும்,

பெரியார் வலைக்காட்சி தொடங்கப்பட்டதும்,

முந்நூறுக்கும்மேல் பகுத்தறிவு நூல்களை மலிவு விலையில் வெளியிட்டதும்,

அதனைப் பரப்பிட பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை ஏற்பாடும்,

புத்தகக் கண்காட்சிகள் நடப்பும், பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன முறையில் ஓங்கி வளர்க்கப்பட்டு இருப்பதும்,

தமது சொந்த 10,277 நூல்களை பெரியார் நூலகம் ஆய்வகத்துக்கு தமிழர் தலைவர் வழங்கியதும்,

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்கம்பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதும்,

இந்தியாவின் தலைநகரிலேயே பெரியார் மய்யம் எழுப்பப்பட்டு இருப்பதும்,

உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரியார் பன்னாட்டு மய்யம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதும்,

உலக மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகத்தை அங்கம் வகிக்கச் செய்திருப்பதும்,

பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அதில் பெரியார் சிந்தனைகள் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு சான்றிதழ் முதல் முனைவர் பட்டப் படிப்புவரை பெறுவதற்கு வகை செய்யப்பட்டு இருப்பது.

- கலி. பூங்குன்றன் "விடுதலை" 01-08-2009

No comments:

Post a Comment