Saturday 23 August 2014

அர்ச்சகப் பார்ப்பனரைச் சுமந்து வரும் வழக்கம்

பல்லக்கிலா ?

திராவிடர் இயக்க ஆர்வலரும், நீண்ட நாள் விடுதலை வாசகருமான தோழர் நெய்வேலி க. தியாகராசன் அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். தனியார்த் தொலைக் காட்சி ஒன்றில் ஒரு சொற் பொழிவாளர் சொன்ன தகவல்தான் அது.

மனிதனை மனிதன் வைத்து இழுத்த கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டு விட் டது. மனிதக் கழிவுகளை மனிதன் சுமக்கும் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால்
மனிதனை சாமி சிலையோடு சேர்த்துச் சுமக்கும் இழிவு இன்னமும் தொடர்கிறதே ஏன்? ஆன்மீகவாதிகள் சிந்திப்பார்களா!

அந்தத் தனியார்த் தொலைக்காட்சியில் இவ் வாறு கூறியவர் ஒர் ஆன்மிகவாதியென்றால் ஆச்சரியமாகவே இருக்கும். அவர் வேறு யாருமல்ல - சுகி சிவமே!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமை மீறலை எதிர்த்துத் திராவிடர் கழகம் போராட்டங்களை கூட நடத்தியதுண்டு.

திருவாரூரையடுத்த தப்பளாம்புலியூர் என்ற ஊரில் சாமியோடு அர்ச்சகப் பார்ப்பனரைச் சுமந்து வரும் வழக்கம் இருந்து வந்தது. திராவிடர் கழகம் எச்சரித்து, அடுத்து போராட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் அந்த பழக்கம் கைவிடப்பட்டது.

சிறீரெங்கத்தில் ரெங்க நாதன் கோயிலில் நெடுங் காலமாக பிரம்மரத முறை உண்டு; பல்லக்கில் பார்ப்பனர்களைச் சுமந்து வரும் நிகழ்ச்சி அது. கைசிக ஏகாதசியில் கைசிகப் புராணம் பாடி முடித்து, காலையில் பிரம்ம ரதத்தில் ஏறிக் கொள்வர் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள். அவர்களை சிறீ பாதம் தாங்குவோர் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்கள். (சூத்திரத் தமிழர்களான தூக்கிச் செல்பவர்களுக்கு அப்படி ஒரு பெயர்) திராவிடர் கழகம் அதனை எதிர்த்தது; இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் அதனைக் கை விடக் கோரினர் எதிர்த்து அர்ச்சகப் பார்ப்பனர்கள் நீதி மன்றம்கூட சென்றனர்; தீர்ப்பையும் மீறி பல்லக்கில் பார்ப்பனர்கள் பவனி வர முயன்றனர். திராவிடர் கழகம் களத்தில் இறங்கி யது. விளைவு சிறீபாதம் தாங்குவோரும் (சுமப்பவர் களுக்கு இப்படியொரு பெயர்) இனி பார்ப்பனர் களைப் பல்லக்கில் வைத்துத் தூக்க மாட்டோம் என்று எழுத்து மூலமாகவே எழுதிக் கொடுத்து விட்டனர். அத்தோடு ஒழிந்தது (7.12.2011)

மடாதிபதிகளும் பல்லக்கில் வருவதுண்டு. அப்படித்தான் திருவா வடுதுறை ஆதீன கர்த்தர் ஆண்டுதோறும் பட்டினப் பிரவேசம் என்று கூறி மற்றவர்கள் தூக்கி சுமக்கப் பவனி வருவார்.

திராவிடர் கழகம் களத் தில் இறங்கி மறியலுக்குத் தயாரானது. விளைவு அந்தப் பட்டினப் பிரவே சத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சங்கராச்சாரியார்கள் பல்லக்கில் செல்லுவதும் அடியோடு ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் காரணம் தந்தைபெரியா ரும், திராவிடர் கழகமுமே!

- மயிலாடன்

https://www.facebook.com/ottraipaththi.viduthalai

No comments:

Post a Comment