Saturday, 23 August 2014

தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால் ....



தனது ஜாதியின் பெருமை, ஜாதிக்கான கவுரவம் எல்லாவற்றையும் தன் ஜாதி பெண்களின் நடவடிக்கைகளிலேயே வைத்திருக்கிறார்கள் ஆதிக்க ஜாதிக்கார்கள்.

இந்த ஜாதிரீதியான கவுரவங்களில், தன் ஜாதியைவிட ‘உயர்ந்த’ ஜாதிக்காரரோடு காதல் திருணமத்தை தன் பெண் செய்து கொண்டால், அதை பெரிய அவமானமாக கருதுவதில்லை.

வன்னியர் ஜாதி பெண்ணையோ, கள்ளர் சமூகத்து பெண்ணையோ, நாடார் பெண்ணையோ; ஒரு பார்ப்பனரோ, பிள்ளையோ, முதலியோ திருமணம் செய்துகொண்டால்; பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் குடியிருப்புகளில் புகுந்து அவர்களை தாக்குவது, வீடுகளை சூறையாடுவது கிடையாது.

இதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் அடிமை மனோபாவம்.

மாறாக தன் பெண் தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால்தான், இந்த கொலை வெறி தாக்குதல்கள்.

- வே.மதிமாறன்

No comments:

Post a Comment