Saturday 16 August 2014

கடவுள் இணையத்தில் இருக்க மாட்டாரா என்ன ?



இப்போதெல்லாம் கடவுள் இருக்கிறார் என முட்டாள் தனமான கருத்துக்களோடு விவாதம் செய்பவர்களை பார்த்தால் கோபம் தான் வருகிறது, அதோடு அவர்களின் அறியாமையை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது.

கடவுள் தன் இருப்பை நேரடியாக உணர்த்துவதில் அவருக்கு என்ன சட்டச் சிக்கல் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இல்லை யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒளிந்து திரிய அவர் என்ன கடன்காரனா ? 

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் இணையத்தில்  இருக்க மாட்டாரா என்ன ? இந்தப் பதிவை கடவுள் படிக்கட்டும், படித்து விட்டு ரோசம் இருந்தால் அவர் தன் இருப்பை உணர்த்தட்டும்.

அத விட்டுட்டு, கல்லை காட்டி மண்ணை காட்டி நாயைக் காட்டி கடவுள்ன்னு நம்ப சொல்றது, அவருக்கு உருவம் இல்லை புருவம் தான் இருக்குன்னு பீலா விடுறத கேக்கவே கேவலமா இருக்கு. மனிதன் அவ்வளவு அறிவு கெட்டுப் போய்ட்டானேன்னு வருத்தமா இருக்கு.

அறிவு வளர்ச்சி அடையாத குழந்தைப் பருவத்தில் அவர்கள் மனதில் பெற்றோர்களால் விதைக்கப்படுகிற கடவுள் எனும் கற்பனைப் பாத்திரம், அவர்கள் வளந்த பின்னும் அவர்களை யோசிக்க விடாமல் - கேள்வி கேட்க விடாமல் ஆக்கி விடுகிறது, காரணம் நெடுங்காலமாய் அவர்கள் மனதில் தேக்கி வைத்த சிந்தனை அது. அவர்கள் அதை விட்டு வெளியே வருவதும் அவ்வளவு சுலபமானது அல்ல.

எது நடந்தாலும் கடவுள் செயல்ன்னு சொல்றான், இதை விட பெரிய கொடுமை குழந்தை பிறந்தாக் கூட கடவுள் செயல்ன்னு சொல்றான், குழந்தை பிறந்ததில் கடவுளின் பங்களிப்பு இருக்குன்னு சொல்லி, குடும்பத்துக்குள்ள பிரச்சனைகளை உண்டாக்குறான். எல்லாம் கடவுள் செயல் என்றால் யாருமே வேலைக்கு போகாமல் வீட்டிலே தூங்கிக் கொண்டா இருக்கிறார்கள் ? ?

நாம் பயன்படுத்தும் அத்தனை பொருள்களிலும் மனித உழைப்பும் வியர்வையும் கொட்டிக் கிடக்கிறது. தயவு செய்து எல்லாம் அவன் செயல் எனச் சொல்லி மனித உழைப்பை கேவலப்படுத்தாதீர்கள் .

- பாசு . ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment