Sunday 17 August 2014

இந்தி திணிப்பு பற்றி தமிழர்களுக்காக ஒரு கேள்வி பதில் :



1) இந்தி தேசிய மொழியா?

இல்லை. தேசிய மொழியாக இருந்தால் மத்திய அரசி இப்படி திருட்டுத்தனமாக திணிக்க வேண்டிய தேவையே வராதே! இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது என்றுதான் அதன் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதையே சமீபத்தில் அகமதாபாத் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

2) ஏன் மத்திய அரசு தமிழ்நாட்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை இந்தியில் தொடர்பு கொள்ளச் சொல்கிறது?

தமிழ்நாட்டுக்கு 1930ல் பெரியாராலும், 1960களில் திமுகவாலும் ‘இந்தி திணிப்பு’ என்னும் நோயைத் தடுக்கும் ’இந்தி திணிப்பு எதிர்ப்பு’ என்னும் தடுப்பூசி போடப்பட்டதுதான் காரணம். நமக்கு இந்தி திணிப்பிற்கு எதிராக constitutional immunity உண்டு. நாம் எப்போதோ பெற்ற அதைப் பெற, இப்போதுதான் பெங்காளிகளும், கன்னடர்களும், மராட்டியர்களும், தெலுங்கர்களும் கிளம்பியிருக்கிறார்கள். அதன் பொருட்டே மத்திய அரசுக்கு எதிரான கலைஞரின் சமீபத்திய அறிக்கையை தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னோடிகள் நாம், நம் தமிழகத்தின் திராவிட இயக்கம்!

3) ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒரு தேசியமொழி வைத்திருப்பதால் தான் முன்னேறியிருக்கிறார்கள் என்பது உண்மையா?

பச்சைப் பொய். அவர்கள் ஒரு தேசியமொழியை உபயோகிப்பதால் முன்னேறவில்லை, தங்கள் தாய்மொழியை உபயோகிப்பதால் முன்னேறியிருக்கிறார்கள். இந்தியர்கள் தாய்மொழு என்ன என்பதற்கு ஒரு வார்த்தையில் உங்களால் பதில் அளிக்க முடியுமா?

4) இந்தி படித்தால் என்ன கெட்டுவிடப் போகிறது? இந்தி அன்னிய மொழி என்றால் ஆங்கிலமும் அந்நிய மொழிதானே?

எந்த மொழியைப் படித்தாலும் நல்லதுதான். ஆனால் தேசிய மொழியாக ஆக்கி, கட்டாயத்தின் பேரில் படிப்பதுதான் ஜனநாயக விரோதமானது, தவறு. பிறந்ததில் இருந்து தாலாட்டு முதற்கொண்டு எல்லாவற்றையும் இந்தியிலேயே கேட்டு வளரும் ஒரு குழந்தையுடன், இந்தியை ஒரு பாடமாக மட்டும் பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகள் எப்படி போட்டி போட முடியும்? இந்தி தேசியமொழி ஆக்கப்பட்டு அரசு தேர்வுகள் அனைத்தும் இந்திதான் என்றால் இந்தி அல்லோதோரின் நிலை நக்கிக்கொண்டு போய் விடாதா? எனக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும் என்பதற்காக, ஒரு ஆங்கிலேயனுடன் என்னால் ஆங்கிலத்தில் போட்டி போட முடியுமா? அது நியாயமான போட்டியாக இருக்க முடியுமா? இந்தப் பிரச்சினையை சரி செய்யத்தான் எல்லா மொழியினருமே ஒரு பாடமாக கற்கும் ஆங்கிலத்தை இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆக்கியிருக்கிறார்கள். மேலும் உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன். ஆங்கிலம் தமிழுக்கு எவ்வளவு அந்நியமோ, அதைவிட அந்நியம் இந்தி! இந்தியா என்ற நாடே சமீபத்தில் உருவானது என்பதை நினைவில் கொள்க!

5) இந்தியைத் திணிப்பதால் இந்தியா உடையுமா?

கண்டிப்பாக உடையும்? ரஷ்யா கம்யூனிசத்தால் உடைந்தது என்றா நினைக்கிறீர்கள்? ரஷ்ய மொழியை திணித்ததால் உடைந்தது!

- டான் அசோக்

No comments:

Post a Comment