Saturday, 23 August 2014

கவிதை - ஆத்திரம்

ஆத்திரம்

உன்னைக் கண்டாலே
தீட்டென்றவன்
ஆலயத்திற்குள் உன்னை
அனுமதிக்காதவன்
பாதத்தில் பிறந்ததாய்
நீ சூத்திரனென்று சூழ்ச்சி செய்தவன்
நீ கல்வி கற்பது
மகா பாவமென்றவன்
பஞ்சம் பிழைக்க வந்த
அந்த பரம அயோக்கியன்
அவனிடம்
தோஷம் கழிக்க
ஆரூடம் கேட்கும் உன்னை
அடித்தாலும் தீராது
கலகக்காரரின்
ஒரு நூறு ஜோட்டால்.

- பி. செழியரசு,தஞ்சை

No comments:

Post a Comment