மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன ?
3டி படமாக காட்டி விஞ்ஞானிகள் சாதனை ...
அமெரிக்க விஞ்ஞானி டான் அர்னால்டு தலைமையில் விஞ்ஞானிகள் குழு செய்த ஆய்வில் மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்பதை 3டி படமாக எடுத்து காட்டி சாதனை படைத்துள்ளனர். மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவா கின்றன என்ற கேள்விதான் மருத்துவ உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக இது வரை இருந்தது. நியூரான்களின் உதவியோடு நினைவு களை சேமித்து வைத்து கொள்கிறது மூளை. இதில் சிக்கலான நரம்பு முனைகளின் வலை பின்னலை நேரடியாக கண்டறிய முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது. தற்போது அதற்கு விடை கிடைக்கும் வகையில், மூளை யில் நினைவுகள் பதிவாவதை ஒளிரும் துணுக்குகளைக் கொண்டு அதை 3டி படமாக காட்டி விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜாக் ஜிஸ்டாக் மற்றும் டாக்டர் ராபர்ட் ஆகியோர் கண்டறிந்த எம்ஆர்என்ஏ டிஸ்ப்ளே என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் குழு இந்த 3டி படத்தை வெளி யிட்டுள்ளது. நாம் பொதுவாக எதையாவது புதிதாக கற்கும் போதோ, பார்க்கும் போதோ நினைவுகள் மூளையில் பதிவாகும் போது அல்லது சேமிக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் நாம் நினைவு கூரும்போது மூளையில் உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும். இதை கணக்கில் கொண்டு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
நினைவுகள் மூளைக்குள் சென்று பதிவாகும் போது, மூளைக்குள் அனுப்பப்படும் ஒருவித ரசாயனம் ஒளிர தொடங்குகிறது. அவ்வாறு ஒளிர்வதை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தின் மூலம் 3டி படமாக எடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போதைய இந்த கண்டுபிடிப்பு மூளை மற்றும் நரம்பியல் தொடர்பான மருத்துவ துறையில் ஒரு உச்சக்கட்ட சாதனை என்றே கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவா கின்றன, எங்கு சேமிக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தகவல் - http://www.viduthalai.in/

No comments:
Post a Comment